×
Saravana Stores

சின்னசேலம் அருகே சோகம் கணவன் இறந்த அதிர்ச்சியில் மனைவியும் சாவு

சின்னசேலம் : சின்னசேலம் அருகே கணவன் இறந்த 30 நிமிடத்தில் மனைவியும் அதிர்ச்சியில் இறந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே காட்டனந்தல் கிராமத்தை சேர்ந்தவர் செல்லமுத்து(75). விவசாய குடும்பத்தை சேர்ந்தவர். இவருடைய மனைவி ஏலக்கண்ணி(63). இவர்களுக்கு கல்வராயன் என்ற மகனும், லட்சுமி, அலமேலு, காசிமாலா ஆகிய 3 மகள்களும் உள்ளனர்.

இவர்கள் 4பேருக்கும் திருமணம் ஆகி தனித்தனி குடும்பமாக வசித்து வருகின்றனர். செல்லமுத்துவும், ஏலக்கண்ணியும் தனியாக வசித்து வந்தனர். செல்லமுத்துவுக்கு கடந்த 5 வருடமாக உடல்நிலை பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் செல்லமுத்துவின் உடல்நிலை மோசமாகி நேற்று நள்ளிரவு 12.15 மணிக்கு இறந்துள்ளார். இதையடுத்து அவரது மனைவி ஏலக்கண்ணி கணவன் இறப்பை கண்டு அழுது புரண்டுள்ளார்.

அப்போது ஏலக்கண்ணி திடீரென மயக்கமடைந்து 12.45 மணியளவில் இறந்துவிட்டார். இதனால் அவரது மகன், மகள்களும், உறவினர்களும் அவர்களது இறப்பை கேட்டு அதிர்ச்சி அடைந்தனர். கணவன் இறந்த 30 நிமிடத்தில் மனைவியும் அதிர்ச்சியில் இறந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

The post சின்னசேலம் அருகே சோகம் கணவன் இறந்த அதிர்ச்சியில் மனைவியும் சாவு appeared first on Dinakaran.

Tags : Chinnasalem ,Chellamuthu ,Kattanandal village ,Kallakurichi district ,
× RELATED சின்னசேலத்தில் பேருந்து நிலைய வளாகத்தில் தற்காலிக கடைகள் அகற்றம்