×
Saravana Stores

விழுப்புரத்தில் புகழ்பெற்ற புனித பிரான்சிஸ் சவேரியர் ஆலய 150ம் ஆண்டு பெருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது

*3ம் தேதி ஆடம்பர தேர்பவனி

விழுப்புரம் : விழுப்புரம் புனிதபிரான்சிஸ் சவேரியர் ஆலய 150ம் ஆண்டு பெருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழுப்புரம் நாப்பாளைய தெருவில் புகழ்பெற்ற புனிதபிரான்சிஸ் சவேரியர் ஆலயம் உள்ளது. இந்த ஆலயத்தில் 150ம் ஆண்டு பெருவிழா நேற்று முன்தினம் இரவு கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதில் திரளான கிறிஸ்தவர்கள், முக்கிய பிரமுகர்கள் கலந்துகொண்டனர். ெபருவிழாவையொட்டி 150 தேவாலயங்களுக்கு கொடி கொண்டு செல்லப்பட்டு ஏற்றப்பட்டன.

தொடர்ந்து தினசரி திருப்பலி நிகழ்ச்சியும், மாலையில் தேர்பவனியும் நடக்கிறது. தொடர்ந்து முக்கிய நிகழ்வாக டிசம்பர் 3ம் தேதி ஆடம்பர தேர்பவனி நிகழ்ச்சி நடக்கிறது. அதில் பிரான்சிஸ் சவேரியர் சொரூபம் வைக்கப்பட்டு நகரின் முக்கிய வீதிகள் வழியாக பவனியாக வந்து மீண்டும் ஆலயத்தை வந்தடையும். நேற்று முன்தினம் தொடங்கிய பெருவிழாவில் தேவாலய பங்குதந்தை, உதவி பங்குதந்தை மற்றும் அப்பகுதி நகரமன்ற உறுப்பினர் பிரியாபிரேம் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

The post விழுப்புரத்தில் புகழ்பெற்ற புனித பிரான்சிஸ் சவேரியர் ஆலய 150ம் ஆண்டு பெருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது appeared first on Dinakaran.

Tags : St. ,Francis ,Xavier Church ,Villupuram ,Maha Therbhavani ,St. Francis Xavier Church ,Nappalaya Street, Villupuram ,St. Francis Xavier ,Church ,
× RELATED புனித சவேரியார் ஆலய திருவிழா கொடியேற்றம்