சென்னை: தங்கம் விலை கடந்த அக்டோபர் மாதம் அதிரடியாக உயர்ந்து தினம்தினம் புதிய உச்சத்தை கண்டது. கடந்த 23ம் தேதி தங்கம் விலை ₹58,400க்கு விற்பனையானது. இதன் மூலம் தொடர்ந்து 6 நாட்களில் தங்கம் விலை சவரனுக்கு ₹2,920 வரை உயர்ந்தது. 24ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) விடுமுறை தினம் என்பதால் தங்கம் விலையில் எந்தவித மாற்றமும் ஏற்படவில்லை. ஒரு நாள் விடுமுறைக்கு பிறகு நேற்று முன்தினம் தங்கம் மார்க்கெட் தொடங்கியது. அதில் தங்கம் விலையில் திடீரென அதிரடி மாற்றம் காணப்பட்டது. அதுவும் வாரத்தின் முதல் நாளிலேயே தங்கம் விலை கிராமுக்கு ₹100 குறைந்து ஒரு கிராம் ₹7,200க்கும், சவரனுக்கு ₹800 குறைந்து ஒரு சவரன் ₹57,600க்கு விற்கப்பட்டது. தங்கம் விலை ஒரு வாரமாக அதிரடியாக உயர்ந்து வந்த நிலையில், இந்த திடீர் விலை குறைவு நகை வாங்குவோருக்கு சற்று ஆறுதலை அளித்திருந்தது.
அதற்குள் நேற்று தங்கம் விலை மேலும் அதிரடியாக சரிவை சந்தித்தது. நேற்று மட்டும் தங்கம் விலை கிராமுக்கு ₹120 குறைந்து ஒரு கிராம் ₹7,080க்கு விறக்கப்பட்டது. சவரனுக்கு ₹960 குறைந்து ஒரு சவரன் ₹56,640க்கு விற்பனையானது. தொடர்ந்து 2 நாட்களில் தங்கம் விலை சவரனுக்கு ₹1,760 குறைந்துள்ளது. இந்த அதிரடி விலை குறைவு நகை வாங்குவோரை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. வெள்ளியின் விலையும் 7 நாட்களுக்கு பிறகு நேற்று கிராமுக்கு ₹3 குறைந்தது. இதன் மூலம் ஒரு கிராம் ₹98க்கும், ஒரு கிலோ கட்டி வெள்ளி ₹98,000க்கும் விற்பனை செய்யப்பட்டது.
The post இரண்டாவது நாளாக அதிரடி மாற்றம்: தங்கம் விலை சவரனுக்கு ரூ960 குறைந்தது appeared first on Dinakaran.