×
Saravana Stores

திருப்பதியில் வைகுண்ட ஏகாதசி நாளான ஜனவரி 10 முதல் 19ம் தேதி வரை சொர்க்கவாசல் வழியாக பக்தர்கள் தரிசனம்


திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சொர்க்கவாசல் திறக்கப்படுவது தொடர்பான ஏற்பாடுகள் குறித்து கூடுதல் செயல் அதிகாரி வெங்கையாசவுத்திரி தலைமையில் ஆய்வுக்கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் வெங்கையா சவுத்திரி பேசுகையில், வரும் 2025ம் ஆண்டு ஜனவரி 10ம் தேதி முதல் 19ம் தேதி வரை வைகுண்ட வாயில் எனும் சொர்க்கவாசல் திறக்கப்பட்டு 10 நாட்களுக்கு பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள். பக்தர்களுக்கு சிரமம் ஏற்படாமல் தரிசனம் செய்யும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த 10 நாட்களில் சிபாரிசு கடிதங்களுக்கான விஐபி தரிசனம், கைக்குழந்தைகளுடன் பெற்றோர், மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகள் ராணுவம், என்.ஆர்.ஐ.களுக் கான சிறப்பு தரிசனங்களும் ரத்து செய்யப்படுகிறது. ஜனவரி 9ம்தேதி முதல் 19ம்தேதி வரை அனைத்து ஆர்ஜித சேவைகளும் ரத்து செய்யப்பட்டுள்ளது.

உண்டியலில் திருடிய தமிழக பக்தர் கைது
கடந்த 23ம் தேதி மதியம் 2 மணியளவில் திருப்பதி ஏழுமலையான் கோயில் மெயின் உண்டியலுக்கு அருகில் வைக்கப்பட்டிருந்த மற்றொரு உண்டியலில் பக்தர்கள் காணிக்கை செலுத்திக் கொண்டிருந்தனர். அப்போது ஒருவர் மட்டும் உண்டியலில் கை வைத்துக்கொண்டு பக்தர்கள் செலுத்தும் காணிக்கையை கையில் பிடித்துக்கொண்டு அப்படியே தனது பாக்கெட்டில் வைத்துக்கொண்டு திடீரென வெளியேறினார். சிசிடிவி காட்சி அடிப்படையில், தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலை சேர்ந்த வேணுவாணலிங்கம் என்பவரை கைது செய்த போலீசார், அவரிடம் இருந்து ₹15 ஆயிரத்தை பறிமுதல் செய்தனர்.

The post திருப்பதியில் வைகுண்ட ஏகாதசி நாளான ஜனவரி 10 முதல் 19ம் தேதி வரை சொர்க்கவாசல் வழியாக பக்தர்கள் தரிசனம் appeared first on Dinakaran.

Tags : Sorkavasal ,Vaikunda Ekadasi ,Tirupati ,Tirumala ,Venkaiah Chaudhary ,Heaven ,Tirupati Eyumalayan Temple ,Venkaiah Chowdhury ,
× RELATED திருப்பதியில் வைகுண்ட ஏகாதசி நாளான...