×
Saravana Stores

3 மாத ஆண் குழந்தை சாவு

தர்மபுரி, நவ. 27: தர்மபுரி வெண்ணாம்பட்டி ரயில்வே கேட் பகுதியில் வசிப்பவர் முத்தியர் சரிக். இவரது மனைவி பாத்திமா. இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர். கடந்த 3 மாதத்திற்கு முன்பு 3வது ஆக ஆண் குழந்தை பிறந்தது. இந்நிலையில் நேற்று முன்தினம் குழந்தைக்கு பாத்திமா தாய்ப்பால் கொடுத்து தூங்க வைத்துள்ளார். சிறிது நேரம் கழித்து குழந்தையை பார்த்த போது, அசைவற்ற நிலையில் இருந்துள்ளது. அதிர்ச்சியடைந்தவர் உடனே குழந்தையை மீட்டு, தர்மபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு குழந்தையை பரிசோதித்த டாக்டர்கள், ஏற்கனவே குழந்தை உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து தர்மபுரி டவுன் போலீசார் வழக்குபதிவு செய்து, குழந்தை இறப்புக்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

The post 3 மாத ஆண் குழந்தை சாவு appeared first on Dinakaran.

Tags : Dharmapuri ,Muthiar Sariq ,Dharmapuri Vanampatti Railway ,Fatima ,
× RELATED பட்டுக்கூடு விலை ரூ706 ஆக அதிகரிப்பு