×
Saravana Stores

காய வைத்த துணியை எடுத்தபோது 4வது மாடியில் இருந்து தவறி விழுந்த சிறுமி பலி

பூந்தமல்லி: காய வைத்த துணியை எடுத்தபோது வீட்டின் 4வது மாடியில் இருந்து தவறி விழுந்த சிறுமி பரிதாபமாக பலியானார். மடிப்பாக்கம் ராம் நகர் தெற்கு பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பைச் சேர்ந்தவர் யோகேஸ்வரன். இவரது மகள் ஹரிணி (14), வேளச்சேரியில் உள்ள தனியார் பள்ளியில் 9ம் வகுப்பு படித்து வந்தார். நேற்று காலை அந்த பகுதியில் மழை பெய்ததால், 4வது மாடியில் உள்ள கொடிக் கம்பியில் காய போட்டு இருந்த துணிகளை எடுக்க ஹரிணி சென்றுள்ளார். அப்போது, உயரத்தில் இருந்த கம்பியில் இருந்து துணியை எடுக்க முயன்றபோது, கால் வழுக்கியதால், மாடியில் இருந்து கீழே விழுந்துள்ளார்.

இதில், அவருக்கு இடுப்பு, கை, கால், எலும்பு, முறிவு ஏற்பட்டது. இவரது அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த அக்கம் பக்கத்தினர், உடனே ஹரிணியை மீட்டு பள்ளிக்‌‍கரணையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். தகவலறிந்து வந்த மடிப்பாக்கம் போலீசார், சிறுமி சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.

The post காய வைத்த துணியை எடுத்தபோது 4வது மாடியில் இருந்து தவறி விழுந்த சிறுமி பலி appeared first on Dinakaran.

Tags : Poontamalli ,Yogeswaran ,Ram Nagar South, Madipakkam ,Harini ,Velachery ,Dinakaran ,
× RELATED பூந்தமல்லியில் தீ விபத்து; குடிசை வீடுகள் எரிந்து சேதம்