உலக சாம்பியன்ஷிப் செஸ் தொடரில் குகேஷ் – டிங் லிரென் மோதிய போட்டி டிராவில் முடிந்தது

உலக சாம்பியன்ஷிப் செஸ் தொடரில் குகேஷ் – டிங் லிரென் மோதிய போட்டி டிராவில் முடிந்தது. நடப்பு சாம்பியன் சீன வீரர் டிங் லிரென் உடனான முதல் போட்டியில் குகேஷ் தோல்விடைந்த நிலையில் 2-வது போட்டி டிராவில் முடிந்தது. போட்டி தொடங்கி 23வது நகர்த்தலில் இருவரும் டிரா செய்ய ஒப்புக் கொண்டனர். மொத்தம் 14 போட்டிகளில் முதலில் 7.5 புள்ளிகளை எடுப்பவர் உலக சாம்பியன் பட்டம் வெல்வார். இரண்டு போட்டிகள் முடிவில் சீன வீரர் டிங் லிரென் 1.5 புள்ளிகளும் குகேஷ் 0.5 புள்ளிகளும் பெற்றுள்ளனர்.

The post உலக சாம்பியன்ஷிப் செஸ் தொடரில் குகேஷ் – டிங் லிரென் மோதிய போட்டி டிராவில் முடிந்தது appeared first on Dinakaran.

Related Stories: