7 ரன்னுக்கு ஆல் அவுட்: டி20யில் உலக சாதனை: ஐவரிகோஸ்டை வென்ற நைஜீரியா

லாகோஸ்: வரும் 2026ல் நடக்கவுள்ள டி20 உலக கோப்பை போட்டிகளில் பங்கேற்பதற்கான தகுதிச் சுற்று நைஜீரியாவின் லாகோஸ் நகரில் நடந்தது. இதில் ஐவரி கோஸ்ட் – நைஜீரியா அணிகள் மோதின. டாஸ் வென்ற நைஜீரியா பேட்டிங்கை தேர்வு செய்தது. அதிரடி ஆட்டம் ஆடிய அந்த அணி, 4 விக்கெட் இழப்புக்கு 271 ரன் குவித்தது.

இதையடுத்து களமிறங்கிய ஐவரிகோஸ்டின் ஒட்டாரா முகம்மது அதிகபட்சமாக 4 ரன் எடுத்து அவுட்டானார். அதன் பின் வந்த வீரர்கள் மோசமாக ஆடி அடுத்தடுத்து அவுட் ஆகினர். 3 பேர் தலா 1 ரன் எடுத்தனர். 6 பேர் பூஜ்யத்தில் வீழ்ந்தனர். இறுதியில் 7 ரன்னுக்கு ஆல் அவுட்டாகி, குறைந்த ரன்னில் வீழ்ந்த அணியாக புதிய உலக சாதனை படைத்தது ஐவரிகோஸ்ட். நைஜீரியா 264 ரன் வித்தியாசத்தில் வென்றது.

The post 7 ரன்னுக்கு ஆல் அவுட்: டி20யில் உலக சாதனை: ஐவரிகோஸ்டை வென்ற நைஜீரியா appeared first on Dinakaran.

Related Stories: