×
Saravana Stores

கொட்டரை கிராமத்தில் ஆட்டுக்கொல்லி நோய் தடுப்பூசி முகாம்

 

பாடாலூர், நவ.26: ஆலத்தூர் தாலுகா கொட்டரை கிராமத்தில் ஆடுகளுக்கு ஆட்டுக்கொல்லி நோய் தடுப்பூசி முகாம் நடைபெற்றது. பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் தாலுகா கொட்டரை கிராமத்தில் தமிழக அரசின் கால்நடை பராமரிப்புத்துறை மண்டல இணை இயக்குனர் டாக்டர். பகத்சிங் உத்தரவின் படி ஆடுகளுக்கான ஆட்டுக் கொல்லி நோய் தடுப்பூசி முகாம் கால்நடை நோய் புலனாய்வு பிரிவு உதவி இயக்குனர் டாக்டர் குமார் தலைமையில் நடைபெற்றது. முகாமில் கூத்தூர் கால்நடை உதவி மருத்துவர் செல்வகுமார், கால்நடை ஆய்வாளர்கள் பிரபு மற்றும் உதவியாளர்கள் பத்மநாபன், பாண்டியன், பழனி ஆகியோர் முகாமிற்கு வந்த 800 க்கும் மேற்பட்ட ஆடுகளுக்கு ஆட்டுக் கொல்லி நோய் தடுப்பூசி போட்டனர்.

The post கொட்டரை கிராமத்தில் ஆட்டுக்கொல்லி நோய் தடுப்பூசி முகாம் appeared first on Dinakaran.

Tags : LAMB VACCINATION ,CAMP ,GOTARAI VILLAGE ,Batalur ,Alathur Taluga Kottarai village ,PERAMBALUR DISTRICT ,ALATHUR ,TALUGA KOTARAI VILLAGE ,REGIONAL ,DIRECTOR OF ,VETERINARY DEPARTMENT OF TAMIL GOVERNMENT ,DR. ,Bhagatsing ,Lamblia ,Kottarai ,Dinakaran ,
× RELATED காரிமங்கலம் தாலுகாவில் மக்கள் குறைதீர் முகாம்