×
Saravana Stores

சிலுப்பனூர் கிராமத்தில் 100 நாள் வேலை கேட்டு மக்கள் மறியல்

 

அரியலூர், நவ. 22: அரியலூர் மாவட்டம், செந்துறை அடுத்த சிலுப்பனூர் கிராமத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை திட்டத்தை வழங்கக் கோரி அப்பகுதி மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். காலனித்தெரு மக்களுக்கு 100 நாள்கள் கணக்கு முடிந்து விட்டதாக ஊராட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், 30 நாள்களே வேலை வழங்கியதாகவும், மீதமுள்ள நாள்களுக்கு வேலை வழங்க வேண்டும். நூறு நாள் வேலையை முறையாக அனைவருக்கும் வழங்க வேண்டும் என வலியுறுத்தி, செந்துறை சாலையில் மறியலில் ஈடுபட்டனர். தகவலறிந்து வந்த தளவாய் காவல் துறையினர் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்ததையடுத்து அனைவரும் கலைந்து சென்றனர்.

The post சிலுப்பனூர் கிராமத்தில் 100 நாள் வேலை கேட்டு மக்கள் மறியல் appeared first on Dinakaran.

Tags : Silupanur ,Ariyalur ,Sentura, Ariyalur district ,Dinakaran ,
× RELATED அரியலூர் கலெக்டர் பார்வையிட்டார்...