தென்காசியில் மக்கள் குறை தீர்க்கும் கூட்டம் மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்

தென்காசி, நவ.26: தென்காசியில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட கலெக்டர் கமல்கிஷோர் தலைமையில் நடந்தது. இதில் டிஆர்ஓ ஜெயச்சந்திரன், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் முத்துராமலிங்கம், கலெக்டர் நேர்முக உதவியாளர் (நிலம்) செல்வக்குமார், துணை கலெக்டர் (சமூக பாதுகாப்புத்திட்டம்) ஷேக் அயூப், மாவட்ட வழங்கல் அலுவலர் அனிதா, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் ஜெயப்பிரகாஷ் முன்னிலை வகித்தனர். முகாமில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறையில் உபகரணங்கள் வழங்கும் திட்டத்தின் கீழ் 4 பார்வையற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு தலா ரூ.3 ஆயிரம் வீதம் ரூ.32 ஆயிரம் மதிப்பிலான பிரெய்லி கை கடிகாரங்களை கலெக்டர் கமல்கிஷோர் வழங்கினார். இதைதொடர்ந்து, இலவச வீட்டுமனை பட்டா, முதியோர் உதவித்தொகை, அடிப்படை வசதிகள் ஏற்படுத்தி தரக்கோருதல், பட்டா மாறுதல், மாற்றுத் திறனாளிகள் உதவித்தொகை மற்றும் இதர மனுக்கள் என மொத்தம் 492 மனுக்கள் பெறப்பட்டது. இந்த மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு கலெக்டர் உத்தரவிட்டார்.

The post தென்காசியில் மக்கள் குறை தீர்க்கும் கூட்டம் மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் appeared first on Dinakaran.

Related Stories: