வத்திராயிருப்பு, நவ.26: வத்திராயிருப்பு ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட மகாராஜபுரம் ஊராட்சி சுந்தர விநாயகபுரத்தில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் வீடுகளுக்கு கழிவுநீர் செல்வதற்கு கால்வாய் கட்டப்படவில்லை. எனவே வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் தெருக்களில் ஆறாக பாய்கிறது. தேங்கி கிடக்கும் கழிவு நீரில் கொசுக்கள் உற்பத்தியாகி தொற்றுநோய் பரவுவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
மேலும் இப்பகுதியில் உள்ள பொதுமக்கள் மற்றும் குழந்தைகளுக்கு அவ்வப்போது உடல்நிலை சரியில்லாமல் காய்ச்சல் உள்ளிட்ட தொற்று நோய்கள் பரவி இருப்பதாக கூறுகின்றனர். சுகாதாரக் கேடாக இருக்கும் இப்பகுதியில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக ஆய்வு செய்து கழிவு நீரை முற்றிலுமாக அகற்ற வேண்டும். கழிவுநீர் செல்வதற்கு போதிய கால்வாய்கள் அமைத்துக் கொடுக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
The post வத்திராயிருப்பு அருகே தெருவில் தேங்கி நிற்கும் கழிவுநீர் appeared first on Dinakaran.