மாஸ்கோ: ரஷ்யாவுக்கும் உக்ரைனுக்கும் கடந்த 2022ம் ஆண்டு போர் தொடங்கியது. 2 ஆண்டுகளுக்கும் மேலாக போர் நீடித்து வருகிறது. அங்கு உள்ள குர்ஸ்க் பிராந்தியத்தில் உள்ள சில பகுதிகளை உக்ரைன் ஆக்கிரமித்துள்ளது.இந்த நிலையில், குர்ஸ்க் பிராந்தியத்தில் உக்ரைனுடன் இணைந்து பணியாற்றிய பிரட்டிஷ் நாட்டவரை ரஷ்யா கைது செய்துள்ளது. இதுகுறித்து டாஸ் செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தியில், கைது செய்யப்பட்ட நபரின் பெயர் ஜேம்ஸ் ஸ்காட் ஆண்டர்சன்.பிரிட்டிஷ் ராணுவத்தில் 4 ஆண்டுகள் சிக்னல்மேன் ஆக அவர் பணிபுரிந்துள்ளார். அதன் பிறகு கடந்த சில ஆண்டுகளாக உக்ரைன் ராணுவத்தில் பணிபுரிந்து வந்த அவர் பயிற்சி அதிகாரியாக பணியாற்றினார். அவருடைய விருப்பத்துக்கு எதிராக குர்ஸ்க் பிராந்தியத்திற்கு அவரை உக்ரைன் அனுப்பியுள்ளது என தெரிவித்துள்ளது. ரஷ்ய செய்தி நிறுவனத்தின் இந்த தகவலை உறுதிப்படுத்த முடியவில்லை.
The post ரஷ்யாவுக்கு எதிரான போரில் உக்ரைனுடன் சேர்ந்து போரிட்ட பிரிட்டிஷ்காரர் கைது appeared first on Dinakaran.