×
Saravana Stores

பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலா அருகே குடியிருப்புகளில் பயங்கர தீ விபத்து: 2,000 வீடுகள் தீயில் எரிந்து சேதம்; உடைமைகளுடன் வெளியேறிய மக்கள்!!

மணிலா: பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவில் குடியிருப்பு பகுதி ஒன்றில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் சுமார் 2,000 வீடுகள் எரிந்து சேதமடைந்துள்ளன. மணிலா துறைமுகத்தை ஒட்டி தகர கொட்டகைகளால் ஆன நூற்றுக்கணக்கான வீடுகளை கொண்ட குடியிருப்பில் பொதுமக்கள் வசித்து வந்தன. இந்த நிலையில், திடீரென அங்கு ஏற்பட்ட தீ விபத்தினால் ஏராளமான வீடுகள் பற்றி ஏறிய தொடங்கின. அடுத்தடுத்த வீடுகளுக்கு தீ மளமளவென பரவ தொடங்கியதை அடுத்து வானில் பல அடி உயரத்திற்கு தீ கொளுந்து விட்டு எறிந்ததுடன் அப்பகுதியே கரும்புகை மண்டலத்தால் சூழப்பட்டது.

தீயணைப்பு வாகனங்கள் மூலம் தீயை கட்டுப்படுத்த முடியாத நிலை ஏற்பட்டதை அடுத்து படகுகள், ஹெலிகாப்டர்கள் உதவியுடன் தீயை அணைக்கும் பணிகள் முடுக்கிவிடப்பட்டன. பல மணிநேர போராட்டத்திற்கு பிறகு குடியிருப்பு பகுதியில் பற்றி எறிந்த தீ முற்றிலும் அணைக்கப்பட்டது. இறுதியில் அப்பகுதியே சாம்பல் காடாக காட்சியளித்தது. தீ பரவ தொடங்குவதற்கு முன்பே குழந்தைகள், உடமைகளுடன் அப்பகுதி மக்கள் வெளியேறியதால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது.

The post பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலா அருகே குடியிருப்புகளில் பயங்கர தீ விபத்து: 2,000 வீடுகள் தீயில் எரிந்து சேதம்; உடைமைகளுடன் வெளியேறிய மக்கள்!! appeared first on Dinakaran.

Tags : Philippines ,Manila ,Philippine ,Dinakaran ,
× RELATED எனக்கு எதிரான சதி செய்தால்...