இதுதொடர்பாக வழக்கு பதிவு பதிவு செய்யப்பட்ட நிலையில் அமெரிக்காவின் நியூயார்க் நீதிமன்றம் கவுதம் அதானி மற்றும் சாகர் அதானி உள்ளிட்ட ஏழு பேருக்கு பிடி வாரண்ட் பிறப்பித்துள்ளது. இந்த நிலையில் வழக்கறிஞர் விஷால் திவால் திவாரி என்பவர் உச்ச நீதிமன்றத்தில் ஒரு புதிய அவசர பொதுநல மனுவை நேற்று தாக்கல் செய்துள்ளார். அதில்,‘அதானி நிறுவனம் தொடர்பான விவகாரத்தில் ஏற்கனவே ஹிண்டன்பர்க் அறிக்கையின்படி அவர்களது குழுமம் மீது பங்குச்சந்தை வர்த்தக முறைகேடு புகார் எழுந்தது.
இதுதொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இந்த சமயத்தில் அமெரிக்காவில் சூரிய சக்தி திட்டத்தில் முதலீட்டாளர்களை ஏமாற்றியதாகவும், இந்திய அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்ததாகவும் கவுதம் அதானி உள்ளிட்டோர் மீது குற்றச்சாட்டுகள் உள்ளது. மேலும் அவர்களுக்கு எதிராக பதிவு செய்யப்பட்ட வழக்கில் நியூயார்க் நீதிமன்றம் பிடிவாரன்ட் பிறப்பித்துள்ளது. இவையெல்லாம் அதானி நிறுவனம் மீதான சந்தேகத்தை அதிகப்படுத்தி உள்ளது.
குறிப்பாக ஹிண்டன்பர்க் விவகாரத்தில் இதுவும் தொடர்பாக இருக்கும் என்று நம்பப்படுகிறது. எனவே தேசநலன் கருதி அதானி குழுமம் மீதான குற்றச்சாட்டுகளை கருத்துக்களை அடிப்படையாக இது தொடர்பான இந்த புதிய பொதுநல மனுவை அவசர வழக்காக உடனடியாக உ ச்ச நீதிமன்றம் விசாரித்து உத்தரவிட வேண்டும் மேலும் ஹிண்டன்பர்க் பிரதான வழக்குடன் இந்த புதிய மனுவையும் சேர்த்து விசாரித்தும் உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்று மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும்.
The post தேச நலனை கருத்தில் கொண்டு அதானி நிறுவன மோசடி வழக்கை விரைந்து விசாரிக்க வேண்டும்: உச்ச நீதிமன்றத்தில் புதிய வழக்கு appeared first on Dinakaran.