×
Saravana Stores

ஐபிஎல் வரலாற்றில் புதிய மைல் கல் பண்ட்டை ரூ.27 கோடிக்கு ஏலம் எடுத்த லக்னோ: இஷான் கிஷணை ரூ.11.25 கோடிக்கு தட்டி தூக்கிய சன்ரைசர்ஸ்

ஜெட்டா: இந்தியன் பிரீமியர் லீக் டி20 தொடர் வரலாற்றில் மிக அதிக தொகைக்கு ஏலம் எடுக்கப்பட்ட வீரர் என்ற பெருமையை இந்திய வீரரும் விக்கெட் கீப்பருமான ரிஷப் பண்ட் நேற்று தட்டிச் சென்றார். அவரை, ரூ.27 கோடிக்கு லக்னோ அணி ஏலம் எடுத்துள்ளது. இஷான் கிஷணை சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணி, ரூ.11.25 கோடிக்கு ஏலம் எடுத்துள்ளது. கிரிக்கெட் ரசிகர்களால் ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்ட, 2025 ஐபிஎல் சீசனுக்கான ஏலம், சவுதி அரேபியாவின் ஜெட்டா நகரில் நேற்று நடந்தது. ஐபிஎல்லில் 10 அணிகள் பங்கேற்க உள்ளன.

ஏலம் துவங்கிய முதல் நாளான நேற்று, ஐபிஎல் வரலாற்றில் இல்லாத வகையில், ஷ்ரேயாஸ் ஐயரை, பஞ்சாப் கிங்ஸ் அணி, ரூ.26.75 கோடிக்கு ஏலம் எடுத்து பரபரப்பை ஏற்படுத்தியது. ஆனால், இந்த பரபரப்பு, வெறும் 22 நிமிடங்களே நீடித்தது. அதன் பின், இந்திய வீரர் ரிஷப் பண்ட்டை ரூ.27 கோடிக்கு ஏலம் எடுத்து லக்னோ அணி இன்ப அதிர்ச்சி தந்தது. இதன் மூலம் ஐபிஎல் வரலாற்றில் இது வரை இல்லாத அளவுக்கு அதிக தொகைக்கு ஏலம் எடுக்கப்பட்ட வீரர் என்ற பெருமையை பண்ட் தட்டிச் சென்றார்.

சிறந்த விக்கெட் கீப்பரும், பேட்ஸ்மேனுமான இஷான் கிஷணை ஏலம் எடுக்க பஞ்சாப், டெல்லி, மும்பை அணிகள் போட்டி போட்டன. கடைசியில் அவற்றை முந்தி, சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி, ரூ.11.25 கோடிக்கு ஏலம் எடுத்தது. வேகப்பந்து வீச்சாளர் முகம்மது ஷமியை ரூ.10 கோடிக்கும், மற்றொரு பந்து வீச்சாளர் ஹர்ஷல் பட்டேலை ரூ.8 கோடிக்கும் சன்ரைசர்ஸ் அணி ஏலம் எடுத்துள்ளது. மேலும், ராகுல் சஹர் ரூ.3.20 கோடி, ஆடம் ஜம்பா ரூ.2.40 கோடிக்கும், அதர்வா டெய்டே ரூ.30 லட்சத்துக்கும் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியால் ஏலம் எடுக்கப்பட்டனர்.

அஷ்வின் ரூ.9.75 கோடி, டெவோன் கான்வே ரூ.6.25 கோடி, நுார் அஹமது ரூ.10 கோடி, சையத் கலீல் அஹமது ரூ.4.80 கோடி, ரச்சின் ரவீந்திரா ரூ. 4 கோடி, ராகுல் திரிபாதி ரூ.3.40 கோடிக்கு சிஎஸ்கேயால் ஏலம் எடுக்கப்பட்டனர். டெல்லி அணி, ராகுலை ரூ.14 கோடி, மிட்செல் ஸ்டார்க்கை ரூ.11.75 கோடி, தமிழ்நாட்டு வீரர் நடராஜனை ரூ.10.75 கோடி, ஜேக் பிரேசர் மெக்கர்க்கை ரூ.9 கோடி, ஹாரி புரூக்கை ரூ.6.25 கோடிக்கு ஏலம் எடுத்தது.

குஜராத் அணி, ஜாஸ் பட்லரை ரூ.15.75 கோடி, முகம்மது சிராஜை ரூ.12.25 கோடி, கேகிஸோ ரபாடாவை ரூ.10.75 கோடி, பிரசித் கிருஷ்ணாவை ரூ.9.50 கோடிக்கு ஏலம் எடுத்தது. கொல்கத்தா அணி, வெங்கடேஷ் ஐயரை, ரூ.23.75 கோடி, அன்ரிச் நோர்ட்ஜியை ரூ.6.50 கோடி, குயின்டன் டி காக்கை ரூ.3.60 கோடி, ரஹமதுல்லா குர்பாசை ரூ.2 கோடிக்கு ஏலம் எடுத்தது. லக்னோ அணி, டேவிட் மில்லரை ரூ.7.50 கோடி, ஆவேஷ் கானை ரூ.9.75 கோடி, மிட்செல் ஸ்டார்க்கை ரூ.3.40 கோடி, அய்டன் மார்க்ரமை ரூ.2 கோடிக்கு ஏலம் எடுத்தது. மும்பை அணி, டிரென்ட் போல்டை ரூ. 2 கோடிக்கு ஏலம் எடுத்தது.

பஞ்சாப் அணி, யஷ்வேந்திர சஹலை ரூ.18 கோடி, அர்ஷ்தீப் சிங்கை ரூ.18 கோடி, மார்கஸ் ஸ்டாய்னிசை ரூ.11 கோடி, கிளென் மேக்ஸ்வெல்லை ரூ.4.20 கோடிக்கு ஏலம் எடுத்தது. ராஜஸ்தான் அணி, ஜோப்ரா ஆர்ச்சரை ரூ.12.50 கோடி, வனின்டு ஹசரங்காவை ரூ. 5.25 கோடி, மஹீஸ் தீக்‌ஷனாவை ரூ.4.40 கோடிக்கு ஏலம் எடுத்தது. ஜோஷ் ஹேசல்வுட் ரூ.12.50 கோடி, பில் சால்ட் ரூ.11.50 கோடி, ஜிதேஷ் சர்மா ரூ.11 கோடி, லியாம் லிவிங்ஸ்டோன் ரூ.8.75 கோடிக்கு, பெங்களூரு அணியால் ஏலம் எடுக்கப்பட்டனர். இன்றும் ஏலம் தொடர உள்ளது.

* ஐபிஎல் வரலாற்றில் அதிக தொகைக்கு ஏலம் எடுக்கப்பட்ட வீரர்கள்
சீசன் வீரர் தொகை அணி
2008 எம்.எஸ்.தோனி ரூ.9.5 கோடி சிஎஸ்கே
2009 கெவின் பீட்டர்சன், பிளின்டாப் ரூ.9.8 கோடி ஆர்சிபி (பீட்டர்சன்) , சிஎஸ்கே (பிளின்டாப்)
2010 பொலார்ட், ஷேன் பாண்ட் ரூ.4.8 கோடி மும்பை (பொலார்ட்), கொல்கத்தா (பாண்ட்)
2011 கவுதம் காம்பீர் ரூ.14.9 கோடி கொல்கத்தா
2012 ரவீந்திர ஜடேஜா ரூ.12.8 கோடி சிஎஸ்கே
2013 கிளென் மேக்ஸ்வெல் ரூ.6.3 கோடி மும்பை
2014 யுவராஜ் சிங் ரூ.14 கோடி ஆர்சிபி
2015 யுவராஜ் சிங் ரூ.16 கோடி டெல்லி
2016 ஷேன் வாட்சன் ரூ.9.5 கோடி ஆர்சிபி
2017 பென் ஸ்டோக்ஸ் ரூ.14.5 கோடி புனே
2018 பென் ஸ்டோக்ஸ் ரூ.12.5 கோடி ராஜஸ்தான்
2019 ஜெய்தேவ் உனத்கத்,
வருண் சக்ரவர்த்தி ரூ.8.4 கோடி ஆர்சிபி (உனத்கத்),
பஞ்சாப் (வருண்)
2020 பேட் கம்மின்ஸ் ரூ.15.5 கோடி கொல்கத்தா
2021 கிறிஸ் மோரிஸ் ரூ.16.25 கோடி ராஜஸ்தான்
2022 இஷான் கிஷண் ரூ.15.25 கோடி மும்பை
2023 சாம் கரன் ரூ.18.5 கோடி பஞ்சாப்
2024 மிட்செல் ஸ்டார்க் ரூ.24.25 கோடி கொல்கத்தா
2025 ரிஷப் பண்ட் ரூ.27 கோடி லக்னோ

The post ஐபிஎல் வரலாற்றில் புதிய மைல் கல் பண்ட்டை ரூ.27 கோடிக்கு ஏலம் எடுத்த லக்னோ: இஷான் கிஷணை ரூ.11.25 கோடிக்கு தட்டி தூக்கிய சன்ரைசர்ஸ் appeared first on Dinakaran.

Tags : Lucknow ,IPL ,Sunrisers ,Ishan Kishan ,Jeddah ,Rishabh Pant ,Indian Premier League T20 series ,Dinakaran ,
× RELATED கும்பகர்ணன்- தொழில்நுட்ப வல்லுநர்...