தமிழகத்தில் மூன்றாவது அணிக்கு வாய்ப்பு இல்லை: துரை வைகோ பேட்டி

ஓசூர்: கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூரில் நேற்று நடந்த திருமண நிகழ்ச்சி ஒன்றில், மதிமுக முதன்மை செயலாளர் துரை வைகோ கலந்து கொண்டார். பின்னர், அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டி: மகாராஷ்டிரா மாநிலத்தில் பாஜ, அங்குள்ள இயக்கங்களை பிளவுபடுத்தி, எம்எல்ஏக்களை குதிரை பேரம் பேசி, ஜனநாயகத்திற்கு எதிராக பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டு தேர்தலில் வெற்றி பெற்றுள்ளது. அடுத்து வரும் காலங்களில் பாஜவின் வெற்றி தொடராது. ராகுல் காந்தி மூலம் அதற்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும்.

தமிழகத்தை பொறுத்தவரை கடந்த 20, 30 ஆண்டுகளாக மூன்றாவது அணிக்கு வாய்ப்பு இல்லை. பொதுநல நோக்கத்தோடு அப்படிப்பட்ட கூட்டணிகள் வந்தாலும், அந்த கூட்டணிக்கு மக்களிடையே ஆதரவு இல்லை. தமிழகத்தில் தற்போது 2 அணிகள் உள்ளன. மக்களை ஜாதி மற்றும் மத ரீதியாக பிரித்து வரும் மதவாத அணி, அதை எதிர்க்கும் திமுக தலைமையிலான இந்தியா கூட்டணி அணி. இந்த இரண்டு அணிகளுக்கு இடையேதான் போட்டி.

அதற்காக 3வது மற்றும் 4வது அணிகள் போட்டி போடக்கூடாது என்று கூற முடியாது. ஆனால், மக்கள் ஆதரவு கொடுக்க வேண்டுமே.  தமிழகத்தை பொறுத்தவரை, கடந்த 7 ஆண்டுகளாக திமுக தலைமையிலான அணியில் நாங்கள் உள்ளோம். இந்த கூட்டணி வலுவான கூட்டணி. வரும் 2026ம் ஆண்டு தேர்தலிலும், மிகப்பெரிய வெற்றி அடையும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

The post தமிழகத்தில் மூன்றாவது அணிக்கு வாய்ப்பு இல்லை: துரை வைகோ பேட்டி appeared first on Dinakaran.

Related Stories: