தமிழ்நாடு அரசு உதவியுடன் ஆன்லைனில் கட்டுரை வினாடி-வினா போட்டி: நேரு யுவகேந்திரா அமைப்பு தகவல்

சென்னை: சென்னை சிவானந்தா சாலையில் உள்ள பத்திரிக்கை தகவல் அலுவலகத்தில் 2025ம் ஆண்டின் தேசிய இளைஞர் விழாவை முன்னிட்டு ‘வளர்ச்சி அடைந்த பாரதம் இளம் தலைவர்கள் உரையாடல்’ என்ற தலைப்பில் போட்டிகள் நடைபெற உள்ளது. இதுகுறித்து நேரு யுவகேந்திரா சங்கத்தின் இயக்குனர் செந்தில்குமார் நிருபர்களிடம் கூறியதாவது: இந்த உரையாடல் நிகழ்ச்சி 3 சுற்றுகளாக நடைபெற உள்ளது. முதல் சுற்றாக வினாடி வினா போட்டி நடைபெறகிறது.

இதற்கான முன்பதிவை இன்று தொடங்கி டிசம்பர் 5 வரை மைபாரத் இணைதளத்தில் செய்து கொள்ளலாம். ஆன்லைனின் மட்டுமே நடைபெறும் இந்த வினாடி வினாவில் போட்டியில் 15 முதல் 29 வயதுக்குட்பட்ட இளம்பெண்கள் மற்றும் ஆண்கள் பங்கேற்பதன் மூலம் அடுத்த கட்டங்களுக்கு தகுதி பெறுவார்கள். 2ம் சுற்றுக்கு தகுதி பெற்றவர்கள், “வளர்ச்சியடைந்த இந்தியாவுக்கான தொழில்நுட்பம்” மற்றும் “வளர்ச்சியடைந்த இந்தியாவுக்கான இளைஞர்களுக்கு அதிகாரமளித்தல்” உள்ளிட்ட 10 தலைப்பில் பற்றிய கட்டுரைகளை சமர்ப்பிப்பார்கள்.

இந்தப் போட்டியும் மைபாரத் இணையதளம் மூலமாக நடத்தப்படும். இரண்டாம் சுற்றில் தகுதி பெறும் பங்கேற்பாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைப்புகளில் மாநில அளவில் தங்கள் கருத்துக்களை முன்வைப்பார்கள். வெற்றிபெறும் அணிகள், பிரதமர் மோடியிடம், வளர்ச்சியடைந்த இந்தியாவுக்கான தங்களின் தொலைநோக்குப் பார்வைகளையும் யோசனைகளையும் முன்வைபார்கள். வெவ்வேறு துறைகளில் இருந்து சுமார் 3,000 இளைஞர்கள் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர்.

இதுதொடர்பான கூடுதல் தகவல்களை மைபாரத் தளத்திலிருந்து (https://mybharat.gov.in/) இந்திய விளையாட்டு ஆணையம் நேரு யுவகேந்திரா மற்றும் நாட்டு நலப்பணி திட்ட அலுவலகங்களில் இருந்தும் பெறலாம். மேலும் இந்த போட்டியில் மாணவர்களை பங்கு பெற வைக்க தமிழக அரசு உதவியுடன் அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கும் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
நிகழ்ச்சியில் நடைபெறும் அனைத்து போட்டிகளும் இந்தி மற்றும் ஆங்கிலத்தில் மட்டுமே நடைபெற உள்ளது. இதனால் அரசு பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் பங்கேற்க முடியாத நிலை உள்ளது. தமிழில் நடத்த மேலதிகாரிகளிடம் எடுத்துச் செல்கிறோம் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

The post தமிழ்நாடு அரசு உதவியுடன் ஆன்லைனில் கட்டுரை வினாடி-வினா போட்டி: நேரு யுவகேந்திரா அமைப்பு தகவல் appeared first on Dinakaran.

Related Stories: