- ராமநாதபுரம் மாவட்டம்
- ராமநாதபுரம்
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- முதல் அமைச்சர்
- மு.கே ஸ்டாலின்
- சுதந்திர தினம்
- தின மலர்
ராமநாதபுரம், நவ.23: தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், சுதந்திர தினவிழா உரையில், \”பொதுப்பெயர் (ஜெனரிக்) மருந்துகளையும் பிற மருந்துகளையும் குறைந்த விலையில் பொதுமக்களுக்கு கிடைக்கச் செய்யும் வகையில் முதற்கட்டமாக 1000 முதல்வர் மருந்தகங்கள் துவங்கப்படும்\” என அறிவித்தார்.
முதல்வர் மருந்தகம் அமைக்க விருப்பமுள்ள B.Pharm/D.Pharm சான்று பெற்றவர்கள் அல்லது அவர்களின் ஒப்புதலுடன் தமிழ்நாடு முழுவதும் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் முதல்வர் மருந்தகம் அமைக்க www.mudhalvarmarundhagam.tn.gov.in என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம். முதல்வர் மருந்தகம் அமைக்க விருப்பம் உள்ள தொழில்முனைவோர் 20.11.2024 அறிவித்திருந்த நிலையில் தற்போது பொதுமக்கள் நலன்கருதி 30.11.2024 வரை இணையதளம் மூலம் விண்ணப்பிக்க தேதி நீட்டிக்கப்பட்டுள்ளது. அனைவரும் இவ்வாய்ப்பினை பயன்படுத்தி கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
The post முதல்வர் மருந்தகம் அமைக்க விண்ணப்பங்கள் வரவேற்பு ராமநாதபுரம் மாவட்டத்தில் appeared first on Dinakaran.