×
Saravana Stores

பண்ணூர் கிராமத்தில் மீன் கடைக்காரரை தாக்கிய 7 பேர் மீது வழக்கு

திருவள்ளூர்: பண்ணூர் கிராமத்தில் மீன் கடைக்காரரை தாக்கிய 7 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.  திருவள்ளூர் மாவட்டம் கடம்பத்தூர் ஒன்றியம் கொண்டஞ்சேரி கிராமத்தைச் சேர்ந்தவர் உமாபதி(42). இவர் மப்பேடு அடுத்த பண்ணூர் கிராமத்தில் மீன் கடை வைத்து நடத்தி வருகிறார்.

இந்நிலையில் கடந்த 16ம் தேதி இரவு 8 மணி அளவில் முன்விரோதம் காரணமாக பண்ணூர் கிராமத்தைச் சேர்ந்த சேகர், இக்னேஷியஸ், சால்வி, லில்லி, ஹரிஷ், மைக்கேல், ஷாவன் ஆகியோர் உமாபதியை தகாத வார்த்தைகளால் திட்டியும் மீன் கூடையை கவிழ்த்தும் சரமாரியாக தாக்கியுள்ளனர். இதனால் பலத்த காயமடைந்த உமாபதி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று 21ம் தேதி மப்பேடு போலீசில் புகார் கொடுத்தார். புகாரின் பேரில் போலீசார் ஏழு பேர் மீதம் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post பண்ணூர் கிராமத்தில் மீன் கடைக்காரரை தாக்கிய 7 பேர் மீது வழக்கு appeared first on Dinakaran.

Tags : Pannur village ,Thiruvallur ,Pannur ,Umapati ,Kondancheri ,Kadampathur ,Thiruvallur district ,Mapedu ,
× RELATED கோஷ்டி மோதலில் கல்வீச்சு: 8 பேர் மீது வழக்குப்பதிவு