×
Saravana Stores

`போர்க் லிப்ட்’ வாகனத்தில் சிக்கி தனியார் நிறுவன ஊழியர் தலை நசுங்கி பரிதாப பலி

புழல்: புழல் பாலாஜி நகரில் தனியார் பெல்ட் கம்பெனி செயல்பட்டு வருகிறது. இந்த, கம்பெனியை கடந்த 5 ஆண்டுகளாக மண்ணடியை சேர்ந்த அலி அஸ்தர் நிர்வகித்து வருகிறார். இதில், வியாசர்பாடி, கல்யாணபுரம் 1வது குறுக்கு தெருவை சேர்ந்த ரூபன்(27). டெக்னீஷியனாக பணிபுரிந்து வந்தார்.

இந்நிலையில், நேற்று மாலை லோடு ஏற்றிச்செல்வதற்காக, டெக்னீஷியன் ரூபன், சரக்கு பெட்டிகளை கையாளும் `போர்க் லிப்ட்’ வாகனத்தை இயக்கினார். அப்போது, எதிர்பாராத விதமாக நிலை தடுமாறி கீழே விழுந்த ரூபன், வானத்தில் சிக்கி தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக பலியானார்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார், ரூபனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

* மாடியிலிருந்து விழுந்த பெயின்டர் உயிரிழப்பு
அண்ணாநகர் பாடிகுப்பம் சாலை, காமராஜ் நகரை சேர்ந்த பெயின்டர் வீரா(47), புழல் அடுத்த சூரப்பட்டு ரோடு செந்தில் நகர், 4வது தெருவில் உள்ள ஒரு வீட்டில், கடந்த 2 நாட்களாக பெயின்ட் அடித்து வந்தார். நேற்று முன்தினம் முதல் மாடியில் பணியில் இருந்தபோது, திடீரென தடுமாறி கீழே விழுந்ததால், தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. அவரை மீட்டு ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி இறந்தார். இதுகுறித்து, புழல் போலீசார் வழக்குப்பதிவு செய்து, ஒப்பந்ததாரர் ஏழுமலை என்பவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post `போர்க் லிப்ட்’ வாகனத்தில் சிக்கி தனியார் நிறுவன ஊழியர் தலை நசுங்கி பரிதாப பலி appeared first on Dinakaran.

Tags : Puzhal ,Puzhal Balaji Nagar ,Ali Asthar ,Manadi ,Ruben ,1st Cross Street, Kalyanapuram, Vyasarpadi ,``Fork lift'' ,
× RELATED சர்வதேச கேரம் போர்டு போட்டியில் 3 தங்க...