×
Saravana Stores

கட்டுமான பொருள்களை திருடிய வழக்கில் 2 பேர் கைது

காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தில் கட்டுமான பொருள்களை திருடிய வழக்கில் 2 பேரை, போலீசார் கைது செய்தனர். காஞ்சிபுரம் மாவட்டம், ஓரிக்கை விவேகானந்தர் நகரை சேர்ந்தவர் டில்லிபாபு. பில்டிங் கன்ஸ்ட்ரக்ஷன் தொழில் செய்து வருகிறார். இவர், காஞ்சிபுரம் மேட்டுதெருவில் கட்டிடம் கட்டும் பணியை ஒப்பந்த அடிப்படையில் செய்து வருகிறார்.

வழக்கம்போல், பணியில் ஈடுபட்டிருந்த டில்லிபாபு, கடந்த 18ம்தேதி கட்டுமான வேலைகளை முடித்துவிட்டு கட்டுமான கருவிகளான மார்பில் கட்டிங் மெஷின், இரும்பு தகடுகள், இரும்பு வளையங்கள் உள்ளிட்ட பொருள்களை கட்டிடத்தின் மூன்றாவது தளத்தில் வைத்துவிட்டு சென்றுள்ளார். மீண்டும் நவ.20ம்தேதி காலை வேலைக்கு வந்தபோது, கட்டுமான பொருள்கள் இல்லாததை கண்டு அதிர்ச்சிடைந்துள்ளார்.

இதுகுறித்து டில்லிபாபு, விஷ்ணுகாஞ்சி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்அடிப்படையில், வழக்குப்பதிவு செய்து போலீசார் நடத்திய விசாரணையில், காஞ்சிபுரம் அடுத்த நாயக்கன்பேட்டையை சேர்ந்த ஜம்மு மகன் ரமேஷ் (36), ரவி மகன் விஜய் என்பதும், இவர்கள், 2 பேரும் கட்டுமான பொருள்களை திருடியதும் தெரியவந்தது. இதனையடுத்து, 2 பேரையும் கைது செய்த போலீசார், அவர்களை நேற்று காஞ்சிபுரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

 

The post கட்டுமான பொருள்களை திருடிய வழக்கில் 2 பேர் கைது appeared first on Dinakaran.

Tags : Kanchipuram ,Kancheepuram ,DILLIBABU ,VIVEKANANDA CITY, KANCHIPURAM DISTRICT, ORIKAI ,Kanchipuram Matutera ,Dinakaran ,
× RELATED காஞ்சிபுரம் பழைய ரயில் நிலையம் கேட்...