×
Saravana Stores

காஞ்சிபுரம் அருகே ரூ.1.33 லட்சம் மதிப்புள்ள குட்கா பறிமுதல்: ராஜஸ்தானை சேர்ந்த 2 பேர் கைது

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் அருகே பெங்களூருவில் இருந்து தமிழகத்திற்கு கடத்தி வரப்பட்ட சுமார் ரூ.1.33 லட்சம் மதிப்புள்ள குட்கா பொருள்களை பறிமுதல் செய்து, ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த 2 பேரை போலீசார் கைது செய்தனர். கர்நாடக மாநிலம், பெங்களூரு பகுதியில் இருந்து வேலூர், காஞ்சிபுரம் மாவட்டம் வழியாக சென்னைக்கு அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பொருள்கள் கடத்தப்படுவதாக காஞ்சிபுரம் மாவட்ட மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

அதன் அடிப்படையில், காஞ்சிபுரம் மாவட்டம், பொன்னியம்மன் பட்டறையில் மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசாருடன் பாலுசெட்டிசத்திரம் போலீசார் நேற்று முன்தினம் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, சந்தேகத்திற்கிடமாக வந்த காரை நிறுத்தி சோதனையிட்டதில், அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பொருள்கள் இருந்துள்ளது. இதனால், காரில் இருந்த 2 பேரை பிடித்து நடத்திய விசாரணையில், ராஜஸ்தான் மாநிலம், சிரோஹி மாவட்டத்தை சேர்ந்த ஹதாமட் சிங் (42), சாந்திலால் (40) என்பதும், தடை செய்யப்பட்ட குட்கா பொருள்கள் கடத்தலில் ஈடுபட்டதும் தெரியவந்தது.

மேலும், அவர்களிடமிருந்து கடத்தலுக்கு பயன்படுத்திய கார் மற்றும் ரூ.1 லட்சத்து 33 ஆயிரத்து 968 மதிப்பிலான 149 கிலோ குட்கா பொருளையும் பறிமுதல் செய்தனர். இதனையடுத்து, குட்கா பொருட்கள் கடத்திய 2 பேரையும் கைது செய்த பாலுசெட்டிசத்திரம் போலீசார், நேற்று அவர்களை காஞ்சிபுரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

The post காஞ்சிபுரம் அருகே ரூ.1.33 லட்சம் மதிப்புள்ள குட்கா பறிமுதல்: ராஜஸ்தானை சேர்ந்த 2 பேர் கைது appeared first on Dinakaran.

Tags : Kanchipuram ,Rajasthan ,Bengaluru ,Tamil Nadu ,Karnataka ,Vellore ,
× RELATED காஞ்சிபுரம் மாவட்டத்தில் முதல்வர்...