விமான நிலையம், அமெரிக்க தூதரகம் அருகே வெடிகுண்டுகள்: இங்கிலாந்து முழுவதும் உச்சக்கட்ட எச்சரிக்கை

லண்டன்: இங்கிலாந்து தலைநகர் லண்டன் நென் எல்ம்ஸ் பகுதியில் உள்ள அமெரிக்க தூதரகம் அருகே துணியால் சுற்றப்பட்டிருந்த சந்தேகத்துக்குரிய வகையிலான தடை செய்யப்பட்ட பொருள் கண்டுபிடிக்கப்பட்டதாக நேற்று தகவல்கள் வந்தன. இதையடுத்து லண்டன் பெருநகர போலீசார் விரைந்து வந்து சோதனை நடத்தினர். அருகில் உள்ள போன்டன் சாலையில் வாகன போக்குவரத்தை போலீசார் தடை செய்தனர். தூதரகம் அருகே கண்டுபிடிக்கப்பட்ட பொருள் பற்றி சமூக வலைதளங்களில் பல யூகங்கள் எழும்பின. பின்னர் அமெரிக்க தூதரகம் அமைந்துள்ள பகுதியில் பயங்கர சத்தத்துடன் வெடி சத்தம் கேட்டது. அதன் பின்னர் லண்டன் போலீசார் சமூக வலைதளங்களில் பதிவிடுகையில்,சற்று முன்னர் அந்த பகுதியில் வெடி சத்தம் கேட்டது உறுதிப்படுத்தப்படுத்தப்பட்டுள்ளது. அங்கு கிடந்த மர்ம பொருளை வெடிக்க செய்து வெடிகுண்டு செயலிழப்பு படையினர் அங்கு கிடந்த மர்ம பொருளை வெடிக்க செய்து செயலிழக்க செய்தனர் என குறிப்பிட்டுள்ளனர்.

அதேபோல் லண்டன் கேட்விக் விமான நிலையத்தின் தெற்கு முனையத்தில் லக்கேஜ் பிரிவில் சந்தேகத்துக்குரிய தடை செய்யப்பட்ட மர்ம பொருள் நேற்று காலை கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து போலீசார் விரைந்து வந்து சோதனை நடத்தினர்.பாதுகாப்பு கருதி விமான நிலையத்தில் இருந்த பயணிகள், விமான ஊழியர்கள் அனைவரும் வெளியேற்றப்பட்டனர். விமான நிலையத்தின் தெற்கு முனைய பகுதியை சுற்றிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வெடிகுண்டு செயலிழப்பு பிரிவு போலீசாரும் அங்கு வரவழைக்கப்பட்டு தீவிர சோதனை நடத்தினர். விமான நிலையத்தை ஒட்டி கேட்விக் ரயில்நிலையமும் மூடப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தால் அங்கு கடும் பரபரப்பு ஏற்பட்டது. ஒரே நாளில் இரண்டு இடங்களில் வெடிபொருள் கண்டுபிடிக்கப்பட்டதால் நாடு முழுவதும் உச்சக்கட்ட எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

 

The post விமான நிலையம், அமெரிக்க தூதரகம் அருகே வெடிகுண்டுகள்: இங்கிலாந்து முழுவதும் உச்சக்கட்ட எச்சரிக்கை appeared first on Dinakaran.

Related Stories: