- மயிலாடுதுறை பட்டமங்கலம் புதுத்தெரு
- மயிலாடுதுறை
- மாவட்ட கலெக்டர்
- மகாபாரதி
- பட்டமங்கலம் புதுத்தெரு
- ஆறுபதிமூவர்பேட்டை
- நகராட்சி
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- முதல் அமைச்சர்
- மயிலாடுதுறை நகராட்சி
மயிலாடுதுறை,நவ.22: மயிலாடுதுறை நகராட்சிக்கு உட்பட்ட பட்டமங்கலம் புதுத்தெரு, அறுபத்திமூவர்பேட்டை, ஆகிய இடங்களில் தமிழ்நாடு முதலமைச்சர் ”உங்களை தேடி உங்கள் ஊர்” திட்டத்தின் கீழ் மாவட்ட கலெக்டர் மகாபாரதி ஆய்வு மேற்கொண்டார். மயிலாடுதுறை நகராட்சி பகுதியில் உள்ள பட்டமங்கலம் புதுத்தெரு வாய்க்கால் மழைநீர் தடையின்றி செல்ல ஏதுவாக தூய்மைப்படுத்தப்பட்டுள்ளதை பார்வையிட்டு, ஆய்வு செய்தார். தொடர்ந்து, மயிலாடுதுறை நகராட்சி பகுதியில் உள்ள அறுபத்திமூவர்பேட்டை வாய்க்கால் மழை நீர் தடையின்றி செல்ல ஏதுவாக தூர்வாரப்பட்டுள்ளதை பார்வையிட்டு தரத்தினை ஆய்வு செய்தார். மேலும், மயிலாடுதுறை உதவிபெறும் தொடக்கப் பள்ளியில் முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தின் செயல்பாடுகளை பார்வையிட்டு, பள்ளி குழந்தைகளுக்கு வழங்கப்படும் உணவின் தரத்தினை கலெக்டர் மகாபாரதி ஆய்வு செய்தார். இவ்வாய்வின்போது, தனித்துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்பு திட்டம்) கீதா, வேளாண்மை துறை இணை இயக்குநர் சேகர், ஆர்டிஓ விஷ்ணுபிரியா, நகராட்சி ஆணையர் சங்கர், தாசில்தார் விஜயராணி. நகராட்சி செயற்பொறியாளர் மகாதேவன் உள்ளிட்ட அரசு அலுவலர்கள் ஆகியோர் உடன் இருந்தனர்.
The post மயிலாடுதுறை பட்டமங்கலம் புதுத்தெருவில் வாய்காலில் மழைநீர் தடையின்றி செல்ல சுத்தம் செய்யும் பணி கலெக்டர் பார்வையிட்டு ஆய்வு appeared first on Dinakaran.