×
Saravana Stores

கம்பராமாயணம் கவிதையும் பாடலும்’ நிகழ்ச்சி : நாளை நடைபெறுகிறது

சென்னை: சென்னை நாரத கான சபா அரங்கில் இசையும் சொற்பொழிவும் கலந்த ‘கம்ப ராமாயணம் கவிதையும் பாடலும்’ நிகழ்வு நாளை நடைபெற உள்ளது. இந்நிகழ்ச்சிக்கு மருத்துவர் முகமது ரேலா, பிரியா ராமச்சந்திரன் ஆகியோர் கம்ப ராமாயண பாடல் வரிகளை தமிழில் வாசித்து அவைகளுக்கான பொருள் விளக்கத்தை ஆங்கிலத்தில் மொழிபெயர்கின்றனர். இந்த பாடல் வரிகளை கர்நாடக சங்கீத வடிவில் இசைப்பாடலாக சிக்கில் குருச்சரண் பாடுகிறார். இதுகுறித்த பத்திரிகையாளர் சந்திப்பில் ரேலா மருத்துமனையின் தலைவர், நிர்வாக இயக்குனர் மருத்துவர் முகமது ரேலா கூறியதாவது: கம்பர் இயற்றிய 10,500 கவிதை வரிகளை கொண்ட கம்ப ராமாயணம், மிக அற்புதமான இலக்கிய பெருங்காவியமாகும்.

தமிழில் எழுதப்பட்ட இக்காவியத்தின் வரிகள் தமிழில் வாசிக்கப்படும். அதன் செழுமையை அனுபவிக்க இயலாதவர்களுக்காக ஆங்கிலத்தில் விளக்கி கூறப்படும். பொதுமக்களுக்கு இசை வடிவிலும் பல்வேறு ராகங்களில் வழங்கப்படும். கம்ப ராமாயணத்தின் நிகரற்ற அழகையும், ஆழத்தையும் வெளிக்கொணர்வதற்கு பிரியா ராமச்சந்திரன் மற்றும் சிக்கில் குருச்சரண் ஆகியோரோடு இந்நிகழ்வில் இணைந்து செயல்படுவதில் நான் பெரும் உற்சாகம் கொள்கிறேன். கர்நாடக இசை உலகில் தனக்கென சிறப்பிடத்தைக் கொண்டிருக்கும் சிக்கில் குருசரண், அவரது இசை ஞானத்தால் கம்ப ராமாயண பாடல் வரிகளுக்கு உயிரூட்டுவார் என்பது நிச்சயம். இவ்வாறு அவர் கூறினார்.

 

The post கம்பராமாயணம் கவிதையும் பாடலும்’ நிகழ்ச்சி : நாளை நடைபெறுகிறது appeared first on Dinakaran.

Tags : Poem and Song ,Chennai ,Kamba Ramayana Poetry and Song ,Naratha Kana Sabha Arena ,Dr. ,Mohammad Rela ,Priya Ramachandran ,Kamba ,
× RELATED பேராசிரியர்கள் தாமதமாக வருவதை தடுக்க...