×
Saravana Stores

தனிப்பட்ட தகராறில் நடக்கும் கொலைகளை வைத்து தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு கெட்டு விட்டது என்று சொல்வது நியாயமல்ல: எடப்பாடிக்கு ஆர்.எஸ்.பாரதி பதில்

சென்னை: தனிப்பட்ட தகராறில் நடக்கும் கொலைகளை கொண்டு, தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு கெட்டு விட்டது என்று சொல்வது எந்த வகையில் நியாயம் என்று எடப்பாடி பழனிச்சாமிக்கு, ஆர்.எஸ்.பாரதி கேள்வி எழுப்பியுள்ளார். திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி நேற்று சென்னை அண்ணா அறிவாலயத்தில் நிருபர்களிடம் கூறியதாவது: கள்ளக்குறிச்சி விஷ சாராய வழக்கை சிபிஐக்கு மாற்றி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது குறித்து, எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். 2018ம் ஆண்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் நெடுஞ்சாலைத் துறையில் ரூ.4800 கோடிக்கு பில் செய்ததற்காக திமுக தொடர்ந்த வழக்கில் சிபிஐ விசாரிக்க வேண்டும் நீதிமன்றமே உத்தரவிட்டது. இவ்வளவு பேசுகிற பழனிச்சாமி, நேற்றை தினம் நீதிமன்ற உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றத்துக்கு தமிழக அரசு போகக் கூடாது என்று மனசாட்சியை அடகு வைத்து விட்டு அறிக்கை விட்டுள்ளார். ஒரு வழக்கறிஞர் கொலை செய்யபட்ட சம்பவத்தை வைத்துக் ெகாண்டு சட்டம் ஒழுங்கு கெட்டு விட்டது என்கிறார். அதிமுக ஆட்சியில் நடக்கவில்லையா? ஓசூரில் வழக்கறிஞர் ெகாலை செய்யப்பட்டது தனிப்பட்ட விவகாரம், காதல் விவகாரம்.

உடனடியாக கொலை செய்தவர் கைது செய்யப்பட்டுள்ளார். அதேபோன்று, தஞ்சாவூரில் ஒரு ஆசிரியர் கொலை செய்யப்பட்டதை எடப்பாடி பழனிச்சாமி சொல்கிறார். அதுவும் தனிப்பட்ட தகராறு. அதாவது, சட்ட ஒழுங்கு என்ன என்பதை எடப்பாடி பழனிச்சாமி புரிந்து கொள்ள வேண்டும். தூத்துக்குடியில் நடைபெற்றது சட்ட ஒழுங்கு பிரச்னை. 13 பேரை சுட்டுக் கொன்றது எடப்பாடி பழனிசாமி ஆட்சியில்தான். கோடநாட்டில் இருந்து இவரது ஆட்சியில் எத்தனையோ ஆசிரியர்கள் கொலை செய்யப்பட்டுள்ளார்கள். அதேபோல்தான் தஞ்சையில் நேற்று நடந்துள்ளது. இதை வைத்து கொண்டு சட்டம்-ஒழுங்கு கெட்டு விட்டது என்று பேசுவது எந்த வகையில் நியாயம். ஜெயலலிதா ஆட்சியில் அவர் பதவியை விட்டு இறங்கும் வரை கணக்கிட்டு பார்த்தால் லட்சக்கணக்கில் கொலைகள் நடந்திருக்கும். திமுக ஆட்சியில்தான் கொலைகள் குறைந்துள்ளன. ஆதாரத்தோடு சொல்ல முடியும். 2020ல் அதிமுக ஆட்சியில் 1672 கொலைகள் நடந்துள்ளன. ஆனால் இப்போது இந்த ஆண்டு ஜூன் 30ம்தேதி வரை 792 கொலைகள்தான் நடந்துள்ளன.சென்னையில் போலீஸ் கமிஷனராக அருண் பொறுப்பேற்ற பின்பு ரவுடிகளை ஒழிப்பதற்காக டிஎஸ்பி ரேங்கில் அதிகாரியை நியமித்து ரவுடிகளை கண்காணிப்பதற்காக நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். அதனால் இன்று சென்னையில் ரவுடியிசம் குறைந்திருக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.

 

The post தனிப்பட்ட தகராறில் நடக்கும் கொலைகளை வைத்து தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு கெட்டு விட்டது என்று சொல்வது நியாயமல்ல: எடப்பாடிக்கு ஆர்.எஸ்.பாரதி பதில் appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,RS Bharathi ,Edappadi ,Chennai ,RS Bharati ,Edappadi Palanichami ,DMK Organization ,Chennai Anna Vidyalaya ,Dinakaran ,
× RELATED வாடகை மீதான சேவை வரியை மறுஆய்வு செய்ய வேண்டும்: விக்கிரமராஜா கோரிக்கை