×
Saravana Stores

கடும் பனிப் பொழிவு காரணமாக அனைத்து பூக்களின் விலை கிடுகிடுவென உயர்வு

ெசன்னை: கடும் பனிப்பொழிவு காரணமாக கோயம்பேடு மார்க்கெட்டில் அனைத்து பூக்களின் விலையும் கிடுகிடுவென உயர்ந்துள்ளது. சென்னை கோயம்பேடு பூ மார்க்கெட்டுக்கு ஆந்திரா, கடப்பா, மாலூர், ஓசூர், தேங்கனிக்கோட்டை மற்றும் ராயக்கோட்டை, சேலம், வேலூர் மற்றும் திருவள்ளூர், ஊத்துக்கோட்டை, பெரியபாளையம் பகுதிகளில் இருந்து பூக்கள் வருகின்றன. தற்போது, கடும் பனிப்பொழிவு நிலவுவதால் பூக்களின் வரத்து குறைந்துள்ளது. இதன்காரணமாக நேற்று காலை கோயம்பேடு மார்க்கெட்டுக்கு மிகவும் குறைந்த அளவே பூக்கள் வந்தன.

இதனால் ஒரு கிலோ மல்லி ரூ.1,200க்கும், ஐஸ் மல்லி மற்றும் கனகாம்பரம் ரூ.1000க்கும், முல்லை மற்றும் ஜாதி மல்லி ரூ.700க்கும், அரளி பூ ரூ.250க்கும், சாமந்தி ரூ.180க்கும், சம்பங்கி ரூ.200க்கும், சாக்லேட் ரோஸ் ரூ.190க்கும், பன்னீர் ரோஸ் ரூ.140க்கும் விற்பனை செய்யப்பட்டது. இதுகுறித்து கோயம்பேடு பூ மார்க்கெட் துணைத் தலைவர் முத்துராஜ் கூறுகையில், பனிப்பொழிவு காரணமாக வெளி மாநிலங்களில் இருந்து பூக்கள் வரத்து குறைந்துள்ளது. இதன்காரணமாக பூக்கள் விலை உயர்ந்துள்ளது என்றார்.

 

The post கடும் பனிப் பொழிவு காரணமாக அனைத்து பூக்களின் விலை கிடுகிடுவென உயர்வு appeared first on Dinakaran.

Tags : Jesannai ,Koyambedu market ,Chennai Koyambedu ,Andhra Pradesh ,Kadapa ,Malur ,Hosur ,Thenganikottai ,Rayakottai ,Salem ,Vellore ,Tiruvallur ,Oothukottai ,Periyapalayam ,
× RELATED கோயம்பேடு மார்க்கெட்டில் பூக்களின் விலை 2 மடங்கு உயர்வு