அதன்படி கடந்த 18ம்தேதி பவுனுக்கு ரூ.480-ம், அதற்கு மறுநாள் (19ம்தேதி) பவுனுக்கு ரூ.560-ம் அதிகரித்தது. இதையடுத்து, 20ம்தேதி தங்கம் விலை அதிகரித்து காணப்பட்டது. அதன்படி ஒரு கிராம் ரூ.7065-க்கும், ஒரு பவுன் ரூ.56,520-க்கும் விற்பனை செய்யப்பட்டது. நேற்று முன்தின நிலவரப்படி, கிராமுக்கு ரூ.50-ம், பவுனுக்கு ரூ.400-ம் உயர்ந்து, ஒரு கிராம் ரூ.7,0115-க்கும், ஒரு பவுன் ரூ.56,920-க்கும் விற்பனை ஆனது.
இந்நிலையில் நேற்றும் தொடர்ந்து 4வது நாளாக தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 உயர்ந்தது. கிராமுக்கு ரூ.30 உயர்ந்து ஒரு கிராம் ரூ.7,145-க்கும் பவுனுக்கு ரூ.240 உயர்ந்து ஒரு பவுன் ரூ. 57,160-க்கும் விற்பனையாகிறது. இதனால் கடந்த 4 நாட்களில் மட்டும் தங்கம் விலை பவுனுக்கு ரூ.1680 உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது. ரஷ்யா-உக்ரைன் இடையே மீண்டும் போர்ப்பதற்றம் ஏற்பட்டதன் விளைவாக தங்கத்தின் மீது முதலீட்டாளர்களின் கவனம் சென்றுள்ளது. இதன் காரணமாக தங்கம் விலை உயரத் தொடங்கி உள்ளது என்று நகை விற்பனையாளர்கள் தெரிவிக்கின்றனர்.
The post தங்கம் விலை 4 நாட்களில் மட்டும் சவரனுக்கு ரூ.1680 உயர்ந்தது: பவுன் ரூ.57 ஆயிரத்தை கடந்தது appeared first on Dinakaran.