மும்பை: அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மாற்று மதிப்பு வரலாறு காணாத அளவுக்கு வீழ்ச்சி அடைந்துள்ளது. புதன்கிழமை வர்த்தக நேர முடிவில் ஒரு டாலர் ரூ.84.42ஆக இருந்த மாற்று மதிப்பு வியாழக்கிழமை பெரும் வீழ்ச்சி அடைந்துள்ளது. காலையில் ஒரு டாலர் ரூ.84.44 என்று 2 காசுகள் குறைந்து தொடங்கிய மாற்று மதிப்பு தொடர்ந்து சரிவடைந்தது. ஒரு டாலர் ரூ.84.50 என்ற அளவுக்குச் சரிந்து பிற்பகலில் ரூ.84,49-க்கு மீண்ட ரூபாயின் மதிப்பு ரூ.84.52ஆக சரிவடைந்தது.
The post அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ரூ.84.52ஆக சரிவு..!! appeared first on Dinakaran.