இதுகுறித்து, உடனடியாக மாங்காடு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார், ராஜ்குமாரின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கடந்த சில தினங்களாக ராஜ்குமார் கல்லூரிக்குச் செல்லாமல் இருந்து வந்துள்ளார். இதனால் அவரது தாய் கல்லூரிக்குச் சென்று கல்லூரி டீனிடம் தனது மகனுக்கு கவுன்சிலிங் கொடுக்குமாறு கூறியுள்ளார். இதையடுத்து ராஜ்குமாரை கல்லூரி டீன் கவுன்சிலிங் எடுத்துக்கொள்ள வருமாறு கூறினார்.
இதனால், ஆத்திரமடைந்த ராஜ்குமார் வீட்டிற்கு வந்து பெற்றோரிடம் சண்டை போட்டதும், இதனால் ஏற்பட்ட மன உளைச்சலில் தற்கொலை செய்து கொண்டிருப்பதும் போலீசாரின் விசாரணையில் தெரியவந்தது. இருப்பினும் அவரது தற்கொலைக்கு வேறு ஏதேனும் காரணம் உள்ளதா என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மருத்துவ கல்லூரி மாணவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
முதியவர் தற்கொலை: உத்திரமேரூர் அடுத்த, திருவந்தவார் கிராமத்தைச் சேர்ந்தவர் முனுசாமி (76). இவரது மகன் ரஞ்சித்குமார். தந்தை-மகன் இருவருக்கும் இடையே ஏற்பட்ட தகறாறு காரணமாக சில தினங்களுக்கு முன்பு முனுசாமி வீட்டை விட்டு வெளியேறியதாக கூறப்படுகிறது. இந்நிலையில், நேற்று முன்தினம் திருவந்தவார் கிராம குளக்கரை அருகே உள்ள மரக்கிளை ஒன்றில் முனுசாமி தூக்கிட்ட நிலையில் சடலமாக கிடப்பதாக சலவாக்கம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில், அங்கு விரைந்து சென்ற போலீசார் முனுசாமியின் உடலை மீட்டு, செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.
The post கல்லூரிக்கு செல்லுமாறு பெற்றோர் கண்டித்ததால் மருத்துவ கல்லூரி மாணவன் தற்கொலை: மாங்காட்டில் சோகம் appeared first on Dinakaran.