அதாவது, இந்த பதவிக்கு தேர்வு செய்யப்படும் நபருக்கு முதல் ஆண்டு சம்பளம் வழங்கப்பட மாட்டாது. அதேபோல, அந்த நபர் ரூ.20 லட்சத்தை முன்தொகையாக, பீடிங் இண்டியா அமைப்புக்கு கொடுக்க வேண்டும். அதன்பிறகு, 2வது ஆண்டில் இருந்து வருடத்திற்கு ரூ.50 லட்சத்திற்கு அதிகமான தொகை சம்பளமாக வழங்கப்படும். மேலும், தேர்வு செய்யப்படுபவர், சொல்லும் தொண்டு நிறுவனத்திற்கு ரூ.50 லட்சம் வழங்கப்படும்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து தீபிந்தர் கோயல் விடுத்துள்ள பதிவில், ‘இது வழக்கமான சலுகைகளுடன் இருக்கும் வேலை கிடையாது. இதற்கு விண்ணப்பிப்பவர்கள் ஊதியம் பெறும் நோக்கில் இருக்க கூடாது. கற்றல் வாய்ப்பிற்காக இந்த பணியை செய்ய வேண்டும். தேர்வு செய்யப்பட்ட பணியாளர்கள், சொமேட்டோவின் உயர் திட்டங்களான பிளின்கிட், ஹைபர்ப்யூர் மற்றும் பீடிங் இந்தியா ஆகியவற்றில் பணியாற்றுவதற்கான வாய்ப்பு வழங்கப்படும்’ என்று குறிப்பிட்டுள்ளார். சொமேட்டோ நிறுவனத்தின் இந்த புதுவிதமான வேலைவாய்ப்பு அறிவிப்பு, சமூக வலைதளங்களில் விவாதத்தை எழுப்பியுள்ளது.
The post புது விதமான நிபந்தனைகளுடன் சொமோட்டாவில் தலைவர் பதவிக்கான விண்ணப்பம்: ஓராண்டுக்கு சம்பளம் கிடையாது; ரூ.20 லட்சம் கொடுக்கணும் appeared first on Dinakaran.