×
Saravana Stores

மனசாட்சியை அடகுவைத்துவிட்டு அறிக்கை வெளியிட்டுள்ளார்: எடப்பாடி பழனிசாமியின் குற்றச்சாட்டுகளுக்கு ஆர்.எஸ்.பாரதி பதில்!!

சென்னை: மனசாட்சியை அடகுவைத்துவிட்டு அறிக்கை வெளியிட்டுள்ளார் என எடப்பாடி பழனிசாமியின் குற்றச்சாட்டுகளுக்கு திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி பதில் அளித்துள்ளார். கள்ளக்குறிச்சி விஷச்சாராய வழக்கை சிபிஐக்கு மாற்றியதை எதிர்த்து தமிழ்நாடு அரசு மேல்முறையீடு செய்யக்கூடாது என்ற இபிஎஸ் கருத்துக்கு ஆர்.எஸ்.பாரதி பதிலடி கொடுத்துள்ளார். இது தொடர்பாக திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி சென்னை அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர்;

பழனிசாமி மீதான டெண்டர் முறைகேடு புகார் தொடர்பாக சிபிஐ விசாரணையை நாங்கள் கோரவில்லை. தன்மீதான சிபிஐ விசாரணைக்கு உச்சநீதிமன்றம் வரை சென்று தடை வாங்கியவர்தான் எடப்பாடி பழனிசாமி. மனசாட்சியை அடகுவைத்துவிட்டு அறிக்கை வெளியிட்டுள்ளார். கள்ளக்குறிச்சி விஷச்சாராய வழக்கில் அரசு எல்லாவிதமான நடவடிக்கைகளையும் மேற்கொண்டது. கள்ளக்குறிச்சி விவகாரத்தில் முதலமைச்சர் உடனடியாக துரிதமான நடவடிக்கையை முதலமைச்சர் மேற்கொண்டார்.

தஞ்சையில் ஆசிரியை கொலை, ஒசூரில் வழக்கறிஞர் மீது தாக்குதல் தனிப்பட்ட விரோதத்தால் நடந்தவை. தனிப்பட்ட கொலைகள் நடப்பதற்கும் சட்டம்-ஒழுங்குக்கும் சம்பந்தம் இல்லை என்பதை எடப்பாடி புரிந்துகொள்ள வேண்டும். தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் 13 பேர் உயிரிழந்தது அதிமுக ஆட்சியில்தான். தூத்துக்குடியில் நடந்ததுதான் சட்டம்-ஒழுங்கு பிரச்சனை. தனிப்பட்ட விரோதத்தால் நடக்கும் சம்பவங்களை எல்லாம் சட்டம் ஒழுங்குடன் தொடர்புபடுத்துவதில் நியாயமில்லை.

கன்டெய்னரில் ரூ.500 கோடி பறிமுதல் வழக்கில் சிபிஐ வழக்கை துவக்கி இருக்கிறதா? விசாரணை நடத்தி இருக்கிறதா?. 2016-ம் ஆண்டு தேர்தல் நேரத்தில் திருப்பூர் அருகே கன்டெய்னரில் கொண்டு செல்லப்பட்ட ரூ.570 கோடி பறிமுதல் செய்யப்பட்டது. ரூ.570 கோடி பறிமுதல் செய்யப்பட்டபோது அதிமுகதான் ஆட்சியில் இருந்தது. திமுக ஆட்சியில் கொலை குற்றங்கள் குறைந்துள்ளதாக புள்ளி விவரத்துடன் ஆர்.எஸ்.பாரதி விளக்கம் அளித்தார்.

The post மனசாட்சியை அடகுவைத்துவிட்டு அறிக்கை வெளியிட்டுள்ளார்: எடப்பாடி பழனிசாமியின் குற்றச்சாட்டுகளுக்கு ஆர்.எஸ்.பாரதி பதில்!! appeared first on Dinakaran.

Tags : Edappadi Palanisami ,R. S. Bharathi ,Chennai ,Eadapadi Palanisamy ,Secretary of State for Conscience ,R. S. Bharati ,R. R. S. Bharathi ,
× RELATED பொய்க்கு மேக்-அப் போட்டால் அது...