சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.240 உயர்ந்து ரூ.57,160க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.30 உயர்ந்து ரூ.7,145க்கு விற்பனையாகிறது. சென்னையில் வெள்ளி விலை மாற்றமின்றி கிராமுக்கு ரூ.101க்கு விற்கப்படுகிறது. தங்கம் மற்றும் நிலத்தில் முதலீடு செய்ய அதிகளவில் மக்கள் விரும்பார்கள் அந்த வகையில் நா் தோறும் தங்க நகைக்கடைகளில் மக்களின் கூட்டமானது அதிகரித்து வருகிறது. இதற்கு முக்கிய காரணம் கடந்த சில மாதங்களாக உயர்ந்திருந்த தங்கத்தின் விலையானது யாரும் எதிர்பார்க்காத வகையில் 10 நாட்களில் 4 ஆயிரம் ரூபாய் அளவிற்கு குறைந்ததே முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது.
எனவே தங்கத்தின் விலையானது எந்த நேரமும் மீண்டும் உயரும் அதற்கு முன்பாக வாங்க வேண்டும் என கடன் வாங்கியோ, பழைய நகைகளை அடகு வைத்தோ புதிய நகைகளை வாங்கி வருகின்றனர். உலகத்திலையே இந்தியாவில் தான் அதிகளவு மக்கள் தங்கத்தை விரும்பி வாங்குகிறார்கள். இதற்கு பல முக்கிய காரணங்கள் கூறப்படுகிறது. குறிப்பாக எதிர்கால முதலீடாகவும், தங்கள் குழந்தைகளின் கல்வி மற்றும் அவசர தேவைகளுக்கும் தங்கத்தை வாங்கி வருகிறார்கள்.
மேலும் திருமணம் போன்ற விஷேச நிகழ்வுகள் அணிவதற்காகவும் தங்கத்தை விரும்பி வாங்குகின்றனர். அந்த வகையில் தங்கம் விலையானது கடந்த 14 ஆண்டுகளில் சவரனுக்கு 50 ஆயிரம் ரூபாய் அளவிற்கு உயர்ந்துள்ளது. இந்த தங்கத்தின் விலையானது வரும் நாட்களில் மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. இந்நிலையில் சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.240 உயர்ந்து ரூ.57,160க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.30 உயர்ந்து ரூ.7,145க்கு விற்பனையாகிறது. சென்னையில் வெள்ளி விலை மாற்றமின்றி கிராமுக்கு ரூ.101க்கு விற்கப்படுகிறது.
The post மீண்டும் உயர்ந்த தங்கத்தின் விலை; சென்னையில் சவரனுக்கு ரூ.240 உயர்ந்து ரூ.57,160க்கு விற்பனை.! வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி appeared first on Dinakaran.