செய்யாறு தாலுகா அலுவலகத்தில் சிறப்பு முகாமில் 55 மனுக்கள் ஏற்பு

செய்யாறு, நவ. 21: செய்யாறு தாலுகா அலுவலகத்தில் நடந்த சிறப்பு முகாமில் 55 மனுக்கள் நேற்று பெறப்பட்டது. தேசிய தொல் பழங்குடியினர் தினத்தை முன்னிட்டு செய்யாறு வட்ட அளவில் சிறப்பு முகாம் நேற்று நடைபெற்றது. இந்த முகாமில் வருவாய்த்துறை மூலம் வருமான சான்று 1, ஜாதி சான்று 4, வீட்டுமனை பட்டா 8, வட்ட வழங்கல் அலுவலகம் மூலம் புதிய ரேஷன் அட்டை, பெயர் நீக்குதல் மற்றும் சேர்த்தல் மனுக்கள் 18, தேர்தல் துறை மூலம் வாக்காளர் அட்டை 3, மின்சார துறை மூலம் புதிய மின் இணைப்பு மற்றும் மின் கம்பம் தொடர்பான மனு 10, பழங்குடியினர் நலத்துறை மூலம் புதிய ஆதார் அட்டை 5, தொகுப்பு வீடு 6 என மொத்தம் 55 மனுக்கள் பெறப்பட்டு உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

The post செய்யாறு தாலுகா அலுவலகத்தில் சிறப்பு முகாமில் 55 மனுக்கள் ஏற்பு appeared first on Dinakaran.

Related Stories: