மாநில அளவிலான கால்பந்தாட்ட போட்டிக்கு தேர்வு 2வது ஆண்டாக சாதனை செய்யாறு அரசு பள்ளி மாணவர்கள்

செய்யாறு, நவ.20: செய்யாறு அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் தொடர்ந்து 2வது ஆண்டாக மாநில அளவிலான கால்பந்தாட்ட போட்டிக்கு தேர்வாகி உள்ளனர். திருவண்ணாமலை மாவட்டத்திற்கு உட்பட்ட பள்ளிகளுக்கு இடையே மாணவர்களுக்கான குடியரசு தின மற்றும் பாரதியார் தின விளையாட்டுப் போட்டிகள் நடந்தன. இப்போட்டியில் 11 குறுவட்ட மையத்தை சார்ந்த கால்பந்து அணிகள் கலந்து கொண்டன. அதன்படி, செய்யாறு அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் இப்போட்டிகளில் பங்கேற்று 3 பிரிவுகளிலும் அபாரமாக விளையாடினர். தொடர்ந்து, 2வது ஆண்டாக அனைத்து பிரிவுகளிலும் வெற்றி பெற்று, தனது கடந்த ஆண்டு சாதனையை தக்க வைத்துக்கொண்டனர். வெற்றி பெற்ற இப்பள்ளி மாணவர்கள் 3 பிரிவுகளிலும் பள்ளிக்கல்வித்துறை சார்பாக நடத்தும் மாநில அளவிலான போட்டிக்கு தேர்வாகி உள்ளனர்.

செய்யாறு சிப்காட் நிறுவனம் தனது ஸ்போர்ட்ஸ் பவுண்டேஷன் மூலம் அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு பயிற்சி அளித்து விளையாட்டு உபகரணங்கள், சீருடைகள், சத்துணவு, விளையாட்டு போட்டிகளுக்கு வாய்ப்பளித்து வருகிறது. இந்நிலையில், செய்யாறு அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியின் தலைமை ஆசிரியர் ஜெயகாந்தன், பெற்றோர் ஆசிரியர் கழக நிர்வாகிகள், மேலாண்மை குழு நிர்வாகிகள், உதவி தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கும், பயிற்சி அளித்த உடற்கல்வி இயக்குனர் மற்றும் உடற்கல்வி ஆசிரியர்களுக்கும், பயிற்சியாளர்களுக்கும் பாராட்டு தெரிவித்தனர்.

The post மாநில அளவிலான கால்பந்தாட்ட போட்டிக்கு தேர்வு 2வது ஆண்டாக சாதனை செய்யாறு அரசு பள்ளி மாணவர்கள் appeared first on Dinakaran.

Related Stories: