இந்த கிரிப்டோ கரன்சியை பணமாக்குவதன் மூலம் அதை மகாராஷ்டிரா பேரவை தேர்தல் செயல்பாட்டில் செல்வாக்கு செலுத்தும் சதியில் சுப்ரியா சுலே, நானா படோலே ஆகியோர் ஈடுபட்டதாக கூறப்படும் இரண்டு குரல் பதிவுகள் அதில் உள்ளன. மேலும் இந்த கிரிப்டோ கரன்சி வழக்கில் முக்கிய சாட்சியாக தணிக்கை நிறுவன ஊழியர் கவுரவ் மேத்தா சுப்ரியா சுலேவுக்கு வாய்ஸ் மெசேஜ் அனுப்பியதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் கவுரவ் மேத்தாவுக்கு சொந்தமாக சட்டீஸ்கர் தலைநகர் ராய்பூரில் உள்ள அவரது வீடு மற்றும் தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறையினர் நேற்று அதிரடி சோதனை நடத்தினர். இதில் ஏதேனும் பணம், ஆவணம் உள்ளிட்டவை கைப்பற்றப்பட்டதா என்ற தகவல்கள் வௌியாகவில்லை.
The post வாக்காளர்களுக்கு பிட்காயின்? ஈடி சோதனை appeared first on Dinakaran.