- செல்வாப்பேருந்தகை
- சென்னை
- தமிழ்நாடு காங்கிரஸ் குழு
- ஜனாதிபதி
- செல்வப்பெருந்தகாய்
- X
- தஞ்சாவூர்
- மாவட்டம்
- மல்லிப்பட்டினம் அரசு மேல்நிலைப் பள்ளி
- ரமணி கதியா
சென்னை: ஆசிரியை கொலை செய்யப்பட்ட சம்பவத்தை அறிந்து அதிர்ச்சி அடைந்தேன் என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை வருத்தம் தெரிவித்துள்ளார். இது குறித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள அவர், தஞ்சை மாவட்டம் மல்லிப்பட்டினம் அரசு மேல்நிலைப்பள்ளியில் ஆசிரியை ரமணி கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்டுள்ள செய்தியறிந்து மிகுந்த வேதனையும், அதிர்ச்சியும் அடைந்தேன். இந்த சம்பவத்தை வன்மையாகக் கண்டிக்கின்றேன்.
குற்றச்செயலில் ஈடுபட்ட குற்றவாளியை உடனடியாக கைது செய்திருப்பது மனதிற்கு ஆறுதல் அளிக்கின்றது. குற்றவாளிக்கு சட்டத்தின்படி கடுமையான தண்டனை வழங்கவேண்டும். இது போன்ற சம்பவங்கள் வருங்காலத்தில் நடைபெறாமல் தடுப்பதற்கு தமிழ்நாடு அரசு உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்ய வேண்டும். மகளை இழந்து வாடும் பெற்றோருக்கும், உறவினர்களுக்கும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பாக ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு தெரிவித்துள்ளார்.
The post ஆசிரியை கொலை செய்யப்பட்ட சம்பவத்தை அறிந்து அதிர்ச்சி அடைந்தேன்: செல்வப்பெருந்தகை appeared first on Dinakaran.