- அரவிந்த் ரமேஷ்
- சட்டமன்ற உறுப்பினர்
- வீராங்கல்
- குபேர முனுசாமி தெரு
- அம்பேத்கர் தெரு
- மேக்மில்லர் தெரு
- சித்தராசு தெரு
- வார்டு 185
- சென்னை பெருங்குடி மண்டலம்
- தின மலர்
ஆலந்தூர்: வீராங்கல் ஓடையில் மழைநீரை சேர்க்க புதிய திட்டம் செயல்படுத்தப்படும் என்று அரவிந்த் ரமேஷ் எம்எல்ஏ கூறினார். சென்னை பெருங்குடி மண்டலம் 185வது வார்டுக்கு உட்பட்ட குபேர முனுசாமி தெரு, அம்பேத்கர் தெரு, மேக்மில்லர் தெரு, சிற்றரசு தெரு ஆகியவை தாழ்வான பகுதியாக உள்ளது. இதன்காரணமாக ஆலந்தூர் மண்டலத்துக்கு உட்பட்ட நங்கநல்லூர் பகுதியில் இருந்து வெளியேறும் மழைநீர் மேற்கண்ட தெருக்களில் உள்ள மழைநீர் வடிகால்வாய்களில் நிரம்பி குடியிருப்புகளில் நுழைந்து தேங்கிவிடுகிறது. இவற்றை தடுக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று அரவிந்த் ரமேஷ் எம்எல்ஏவிடம் மக்கள் கோரிக்கை வைத்தனர்.
இதையடுத்து உள்ளகரம் 185வது வார்டு கவுன்சிலர் சர்மிளா திவாகர், மாநகராட்சி செயற்பொறியாளர் சரவணக் குமாரி ஆகியோருடன் எம்எல்ஏ சென்று மழைநீர் வடிகால்வாய்களை ஆய்வு செய்தார். இதன்பின்னர் எம்எல்ஏ கூறியதாவது; நங்கநல்லூரில் இருந்து அகலமான வடிகால்வாய்களில் இருந்து உள்ளகரத்தில் உள்ள குறுகிய வடிகால்வாய் வழியாக மழைநீர் செல்வதால் அதிக அழுத்தம் காரணமாக வெள்ளநீர் வெளியேறி குடியிருப்புகளில் புகுந்து விடுகிறது. எனவே, நங்கநல்லூரில் உள்ள அகல கால்வாய்களில் இருந்து வெளிவரும் மழைநீரை தடுத்து மாற்று வடிகால் பாதை அமைத்து வீராங்கல் ஓடையில் நேரடியாக சேர்க்க திட்டம் தயாரிக்க அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்த உள்ளேன்.
இவ்வாறு எம்எல்ஏ கூறினார். அப்போது 185வது வார்டு கவுன்சிலர் ஜெ.கே.மணிகண்டன், உதவி பொறியாளர், சத்தியநாராயனண், திமுக நிர்வாகிகள், வட்ட செயலாளர் ஜே.திவாகர், ஜி.செந்தில், அரங்கநாதன், ரவீந்திரகுமார், விநாயகம், சுப்பிரமணி, ஜெயக்குமார், புயல் முருகேசன் உள்பட பலர் இருந்தனர்.
The post வீராங்கல் ஓடையில் மழைநீரை சேர்க்க புதிய திட்டம்: அரவிந்த் ரமேஷ் எம்எல்ஏ பேட்டி appeared first on Dinakaran.