பாகற்காய் ப்ரை

தேவையான பொருட்கள்:

பாகற்காய் – 400 கிராம்
உப்பு – சுவைக்கேற்ப
மஞ்சள் தூள் – 1/4 டீஸ்பூன்
மிளகாய் தூள் – 1 1/2 டீஸ்பூன்
காஷ்மீரி மிளகாய் தூள் – 1 டீஸ்பூன்
மல்லித் தூள் – 1 டீஸ்பூன்
சீரகத் தூள் – 1/2 டீஸ்பூன்
சோம்புத் தூள் – 1/2 டீஸ்பூன்
கரம் மசாலா – 1/2 டீஸ்பூன்
பச்சரிசி மாவு – 3 டேபிள் ஸ்பூன்
ரவை – 2 டேபிள் ஸ்பூன்
எண்ணெய் – பொரிப்பதற்கு தேவையான அளவு

செய்முறை:

முதலில் பாகற்காயை நீரில் கழுவிவிட்டு, அதனுள் உள்ள விதைகளை நீக்கிவிட்டு, சற்று நீளமான மெல்லிய துண்டுகளாக வெட்டி ஒரு பாத்திரத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும்.பின் அந்த பாகற்காயுடன் சிறிது உப்பு மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து கைகளால் நன்கு பிரட்டி, மூடி வைத்து 1/2 மணிநேரம் ஊற வைக்க வேண்டும். இப்படி ஊற வைக்கும் போது, பாகற்காயில் இருந்து நீர் விட்டு வரும். இந்த நீரில் தான் கசப்புத்தன்மை அதிகம் இருக்கும்.1/2 மணிநேரம் கழித்து, பாகற்காயில் உள்ள அதிகப்படியான நீரை கைகளால் பிழிந்து நீக்கிவிட வேண்டும்.
பின்பு அந்த பாகற்காயுடன் மிளகாய் தூள், காஷ்மீரி மிளகாய் தூள், மல்லித் தூள், சீரகத் தூள், சோம்புத் தூள், கரம் மசாலா, பச்சரிசி மாவு, ரவை ஆகியவற்றை சேர்த்து கைகளால் நன்கு ஒன்று சேரும் வரை கிளறி விட வேண்டும்.பின் அதை 15 நிமிடம் அப்படியே ஊற வைக்க வேண்டும்.இறுதியாக ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி சூடானதும், மிதமான தீயில் வைத்து, பிரட்டி வைத்துள்ள பாகற்காய் துண்டுகளை சேர்த்து, உடனே கரண்டியால் கிளறி விடாமல், 1 நிமிடம் கழித்து கரண்டியால் கிளறி விட்டு, நன்கு மொறுமொறுவென்று ப்ரை செய்து எடுத்தால், சுவையான பாகற்காய் குர்குரே அல்லது பாகற்காய் ப்ரை தயார்.

The post பாகற்காய் ப்ரை appeared first on Dinakaran.