×
Saravana Stores

கல்வராயன் மலைப்பகுதி சாலை: தமிழ்நாடு அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு

சென்னை: கல்வராயன் மலைப்பகுதியில் உள்ள வெள்ளிமலை-சின்ன திருப்பதி இடையேயான சாலை எப்போது அமைக்கப்படும்? என சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. கல்வராயன் மலைப்பகுதி மக்களின் சமூக மேம்பாடு தொடர்பாக ஐகோர்ட் தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்த வழக்கு. கல்வராயன் மலைப்பகுதியில் 10 கிலோ மீட்டருக்கு ஒரு சாலை சீரமைக்கப்பட்டுள்ளது. மண் சாலைகளை சீரமைக்க கால அவகாசம் கேட்ட நிலையில், பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய தமிழ்நாடு அரசுக்கு உத்தரவிட்டு விசாரணையை ஐகோர்ட் நவ. 26-க்கு ஒத்திவைத்தது.

The post கல்வராயன் மலைப்பகுதி சாலை: தமிழ்நாடு அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Kalvarayan Hill Road ,Tamil Nadu Govt. ,Chennai ,Vellimalai ,Chinna Tirupati ,Kalvarayan hills ,Madras High Court ,ICourt ,Kalvarayan Hills Road ,Tamil Nadu government ,Dinakaran ,
× RELATED காவல்துறையில் பணிக்கு...