டெல்லி: நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் வரும் 25ல் தொடங்க உள்ள நிலையில், வரும் 24ம் தேதி நடக்க உள்ள அனைத்து கட்சி கூட்டத்திற்கு ஒன்றிய அரசு அழைப்பு விடுத்துள்ளது. நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் வரும் 25ல் தொடங்குகிறது. இந்த குளிர்கால கூட்டத்தொடர் வரும் டிசம்பர் 20ம் தேதி வரை நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரையொட்டி, வரும் 24ம் தேதி நடக்க உள்ள அனைத்து கட்சி கூட்டத்திற்கு ஒன்றிய அரசு அழைப்பு விடுத்துள்ளது. இதன்படி 24ம் தேதி காலை 11 மணிக்கு அனைத்து கட்சி கூட்டம் நடைபெற உள்ளது. அதில் நாடாளுமன்ற கூட்டத்தொடரை சுமுகமாக நடத்துவது குறித்து ஒன்றிய அரசு சார்பில் கோரிக்கை வைக்கப்பட உள்ளது.
வக்பு சட்ட திருத்தம் உள்ளிட்ட முக்கிய மசோதாக்களை நிறைவேற்ற ஒன்றிய அரசு முனைப்பு காட்டி வரும்நிலையில், பல்வேறு முக்கிய பிரச்னைகளை எழுப்ப எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. முன்னதாக நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் குறித்து நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு, ஒன்றிய அரசின் பரிந்துரையின் பேரில் வரும் 25ம் தேதி முதல் டிசம்பர் 20ம் தேதி வரை குளிர்கால கூட்டத்தொடரை இரு அவைகளிலும் நடத்த ஜனாதிபதி ஒப்புதல் வழங்கி உள்ளார். மேலும் நவ.26-ம் தேதி நாடாளுமன்ற மையம் மண்டபத்தில் அரசியல் சாசனத்தின் 75ம் ஆண்டு விழா சிறப்பாக கொண்டாடப்படும் என்று தெரிவித்திருந்தார்.
The post நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் 25ல் தொடங்க உள்ள நிலையில் அனைத்துக் கட்சி கூட்டத்திற்கு ஒன்றிய அரசு அழைப்பு appeared first on Dinakaran.