ஹோபர்ட்: பாகிஸ்தானுடனான 3வது டி20 போட்டியிலும் அசத்தல் வெற்றி பெற்ற ஆஸ்திரேலியா அணி, 3-0 என்ற கணக்கில் தொடரையும் கைப்பற்றி உள்ளது. ஆஸ்திரேலியா சென்றுள்ள பாக். கிரிக்கெட் அணி, 3 டி20 போட்டிகளில் ஆடியது. ஏற்கனவே, இரு போட்டிகளில் மண்ணை கவ்விய பாக். ஹோபர்ட் நகரில் பெலரிவ் ஓவல் மைதானத்தில் நேற்று நடந்த 3வது டி20 போட்டியில் பங்கேற்றது. டாசை வென்ற பாக். கேப்டன் சல்மான் ஆகா, பேட்டிங்கை தேர்வு செய்தார். பாபர் அஸம் (41 ரன்) தவிர, மற்ற வீரர்கள் அனைவரும் மிக மோசமாக ஆடி அணியை பரிதாப நிலைக்கு தள்ளினர். கேப்டன் சல்மான் 1 ரன்னில் ஹார்டியிடம் எல்பிடபிள்யு முறையில் அவுட்டானார். இறுதியில், 11.2 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த பாக். 118 ரன் மட்டுமே எடுத்தது.
ஆஸி.யின், ஆரோன் ஹார்டி 3, ஆடம் ஜம்பா 2, ஸ்பென்சர் ஜான்சன்2 விக்கெட் வீழ்த்தினர். இதையடுத்து, 119 ரன் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் களமிறங்கிய ஆஸி வீரர்கள் பொறுப்பாக ஆடினர். மேத்யு ஷார்ட் (2 ரன்), ஜேக் பிரேசர் (18 ரன்) எடுத்து அவுட்டான போதும், கேப்டன் ஜோஷ் இங்லீஸ் (27 ரன்), மார்கஸ் ஸ்டாய்னிஸ் (ஆட்டமிழக்காமல் 61 ரன்) அதிரடி ஆட்டம் ஆடி, பாக். பந்து வீச்சை துவம்சம் செய்தனர். இறுதியில், 11.2 ஓவரில் 3 விக்கெட் இழப்புக்கு 118 ரன் எடுத்து ஆஸி அணி அபார வெற்றி பெற்றது. இந்த வெற்றி மூலம், பாக் அணியை ஒயிட்வாஷ் செய்துள்ள ஆஸி அணி, 3-0 என்ற கணக்கில் தொடரையும் கைப்பற்றி அபார சாதனை படைத்துள்ளது. ஆட்ட நாயகனாக ஆஸி வீரர் மார்கஸ் ஸ்டாய்னிஸ், தொடர நாயகனாக ஸ்பென்சர் ஜான்சன் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
The post இதுதான்டா ஆஸ்திரேலியா… 7 விக்கெட் வித்தியாசத்தில் பாக்.கை வென்று அசத்தல்: ஒயிட்வாஷ் செய்து தொடரை கைப்பற்றியது appeared first on Dinakaran.