- அகில இந்திய பெண்கள்
- ரேபிட் செஸ்
- கார்ல்சன்
- கொல்கத்தா
- பிரிஸ்டி முகர்ஜி
- அகில இந்திய மகளிர் ரேபிட் செஸ் சாம்பியன்ஷிப்
- மேக்னஸ் கார்ல்சன்
- அனைத்து இந்தியாவும்
- பெண்கள்
- தின மலர்
கொல்கத்தா: அகில இந்திய பெண்கள் ரேபிட் செஸ் போட்டியில் வென்ற பிரிஸ்டி முகர்ஜி, உலகின் நம்பர் 1 செஸ் வீரர் மேக்னஸ் கார்ல்சன் காலை தொட்டு வணங்கி பரிசுக் கோப்பையை பெற்றுக் கொண்டார். இதை சற்றும் எதிர்பாராத கார்ல்சன் வெட்கத்தில் முகம் சிவந்ததை கண்டு ரசிகர்கள் வியப்படைந்தனர். மேற்கு வங்க தலைநகர் கொல்கத்தாவில் நடந்த டாடா ஸ்டீல் செஸ் போட்டிகளில், பிளிட்ஸ், ரேபிட் ஆகிய இரு பிரிவிலும், நார்வேயை சேர்ந்த உலக செஸ் நம்பர் 1 வீரர் மேக்னஸ் கார்ல்சன் வெற்றி பெற்றார்.
நேற்று முன்தினம் நடந்த பிளிட்ஸ் பிரிவு செஸ் இறுதிப் போட்டியில் இந்தியாவின் விதித் குஜராத்தியை வென்று கார்ல்சன் கோப்பையை தட்டிச் சென்றார். பிலிப்பினோ அமெரிக்கரான வெஸ்லி சோ, 2ம் இடத்தையும், அர்ஜுன் எரிகேசி 3ம் இடத்தையும், தமிழகத்தின் பிரக்ஞானந்தா 4ம் இடத்தையும், விதித் குஜராத்தி 5ம் இடத்தையும் பிடித்தனர். அகில இந்திய பெண்கள் ரேபிட் செஸ் போட்டியில் பிரிஸ்டி முகர்ஜி முதலிடம் பிடித்தார். மேக்னஸ் கார்ல்சன் காலை தொட்டு வணங்கி அவரிடம் இருந்து வெற்றிக் கோப்பையை பிரிஸ்டி முகர்ஜி பெற்றுக் கொண்டார். இதை சற்றும் எதிர்பாராத மேக்னஸ் கார்ல்சன் வெட்கத்தில் முகம் சிவந்து தலை கவிழ்ந்தார். இதை கண்ட ரசிகர்கள் வியப்பில் ஆழ்ந்தனர். கார்ல்சனை சூழ்ந்து கொண்ட அவர்கள் ‘ஆட்டோகிராப்’ வாங்கி மகிழ்ந்தனர்.
The post அகில இந்திய பெண்கள் ரேபிட் செஸ்: கார்ல்சன் காலை தொட்டு வணங்கி பரிசு கோப்பை வாங்கிய வீராங்கனை; வெட்கத்தில் சிவந்த முகம் appeared first on Dinakaran.