×
Saravana Stores

கொசு மருந்து குடித்து மாணவி தற்கொலை முயற்சி

சென்னை: சாலிகிராமம் சிவனேயம் தெருவை சேர்ந்தவர் யுவராஜ். இவரது மகள் அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 11ம் வகுப்பு படித்து வருகிறார். வழக்கம்போல் நேற்று முன்தினம் இரவு உணவு அருந்திவிட்டு வீட்டில் இருந்த போது, அவருடைய தாய், பள்ளியில் நடந்த மாதாந்திர தேர்வில் குறைந்த மதிப்பெண் எடுத்ததை கண்டித்துள்ளார். இதனால் மனமுடைந்த சிறுமி வீட்டில் படுக்கை அறையில் இருந்த கொசு மருந்தை எடுத்து குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதை பார்த்த அவரது தாய் அதிர்ச்சியடைந்தார். உடனடியாக மகளை மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்று முதல் உதவி சிகிச்சை அளித்தார். பின்னர், டாக்டர்கள் பரிந்துரைப்படி கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு மாணவி உள்நோயாளியாக சிகிச்சை பெற்று வருகிறார்.

The post கொசு மருந்து குடித்து மாணவி தற்கொலை முயற்சி appeared first on Dinakaran.

Tags : CHENNAI ,Yuvraj ,Sivaneyam Street, Saligramam ,
× RELATED தேர்வில் குறைந்த மதிப்பெண் எடுத்ததை...