×
Saravana Stores

சில்வர் பேப்பர், பிளாஸ்டிக் கவரில் உணவை பார்சல் செய்தால் கடைக்கு சீல்: உணவு பாதுகாப்புத்துறை எச்சரிக்கை

சென்னை: உணவகம் ஒன்றில் பிரியாணி உணவை சில்வர் கவரில் பார்சல் செய்த வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வேகமாக பரவியது. அந்த வீடியோவில் சம்பந்தப்பட்ட நபர் ஒருவர் பிரியாணி கடைக்கு சென்று உணவு பார்சல் செய்து வந்து, அந்த உணவை திறந்து சாப்பிடும் போது சில்வர் கவரை வைத்து உணவு பொட்டலம் கட்டியதை பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளார். இது குறித்து உணவு பாதுகாப்பு துறையின் கவனத்துக்கு வந்த நிலையில், வீடியோ தொடர்பாக விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் இந்த சம்பவம் எங்கு நடைபெற்றாலும் உடனடியாக உணவு பாதுகாப்பு துறைக்கு தகவல் தெரிவிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது. ஏற்கனவே உணவு பாதுகாப்புத்துறை சட்டத்தின் படி பார்சல் வாங்கி செல்லும் உணவுகள் பிளாஸ்டிக் மற்றும் சில்வர் கவரில் பயன்படுத்தி பார்சலை வழங்க வேண்டாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும் இதுபோன்ற சம்பவங்கள் தொடர்ந்து நடந்து வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதனிடையே மீண்டும் இது போன்ற சில்வர் கவர் மற்றும் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தி உணவு வகைகளை பார்சல் செய்தாலோ அல்லது விற்பனை செய்தாலோ அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என உணவு பாதுகாப்பு துறை சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும், கடையின் உரிமையாளர் மீது ரூ.10, 000 அபராதம் விதித்து உணவு பாதுகாப்புத்துறை சட்டத்தின் படி அவரது கடை உரிமத்தை ரத்து செய்து சீல் வைக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக உணவு பாதுகாப்பு துறை ஓட்டல்களுக்கு அனுப்பிய சுற்றறிக்கை: பிளாஸ்டிக் கவர்களில் உணவு பொட்டலங்கள் கட்டினால் உணவு பாதுகாப்பு துறை சட்டப்படி குற்றமாகும். எனவே ஓட்டல்கள் வைத்திருக்கும் அனைவரும் பிளாஸ்டிக் கவர்களை பயன்படுத்தி உணவு டீ, காபி உள்ளிட்டவை பொட்டலம் கட்டக் கூடாது என கேட்டுக் கொள்ளப்படுகிறது. இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளது.

 

The post சில்வர் பேப்பர், பிளாஸ்டிக் கவரில் உணவை பார்சல் செய்தால் கடைக்கு சீல்: உணவு பாதுகாப்புத்துறை எச்சரிக்கை appeared first on Dinakaran.

Tags : Chennai ,Biryani ,Food Safety Department ,Dinakaran ,
× RELATED சென்னை குன்றத்தூரில் ஆற்காடு பிரியாணி கடைக்கு சீல்..!!