- கெங்கையம்மன் கோவில் கும்பாபிஷேகம்
- காரனைபுதுச்சேரி
- கெங்கையம்மன்
- ஊர்ப்பாக்கம், செங்கல்பட்டு மாவட்டம்
- மகா கும்பாபிஷேகம்
- தி.மு.க. பஞ்சாயத்து கவுன்சில்
- ஜனாதிபதி
- நளினி ஜெகன்
கூடுவாஞ்சேரி: செங்கல்பட்டு மாவட்டம், ஊரப்பாக்கம் அடுத்த காரணைப்புதுச்சேரியில் 400 ஆண்டு பழமை வாய்ந்த கெங்கையம்மன் கோயில் உள்ளது. தற்போது, இந்த கோயிலை புதுப்பிக்கும் திருப்பணிகள் முடிவடைந்து திமுக ஊராட்சி மன்ற தலைவர் நளினிஜெகன் தலைமையில் மகா கும்பாபிஷேகம் நேற்று நடைபெற்றது. இதில், பரிகார தெய்வங்களுக்கு வாஸ்து பூஜை, கணபதி ஹோமம், நவசக்தி ஹோமம், பூர்ணாஹூதி, நவகிரக ஹோமம் சர்வசந்தி ஹோமம் உள்ளிட்ட பல்வேறு பூஜைகளுடன் தீபா ஆராதனை நடைபெற்றது. பின்னர், வாணவேடிக்கை, மேள தாளங்களுடன் அம்மனுக்கு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.
இதில், 500க்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை சாமி தரிசனம் செய்தனர். விழாவில், ஊராட்சி மன்ற துணைத் தலைவர் வினோதினி ஞானசேகர், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர்கள் டில்லிபாபு, பத்மநாபன், முன்னாள் மாவட்ட கவுன்சிலர் சண்முகம், முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் கன்னியப்பன், கோயில் நிர்வாகி முருகன் உட்பட ஏராளமானோர் கலந்துகொண்டனர். இந்நிகழ்ச்சியில், கலந்துகொண்ட பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.
The post காரணைபுதுச்சேரியில் கெங்கையம்மன் கோயில் கும்பாபிஷேகம் appeared first on Dinakaran.