×
Saravana Stores

குட்கா வழக்கை முறையாக விசாரிக்காத எஸ்.ஐ சஸ்பெண்ட்


தேனி: குட்கா வழக்கை முறையாக விசாரிக்காமல், குற்றவாளிக்கு உடந்தையாக செயல்பட்டு வந்த சப்இன்ஸ்பெக்டரை, எஸ்பி சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார். தேனி சுப்பன் தெருவில் உள்ள ஒரு குடோனில் ரூ.1 லட்சத்து 67 ஆயிரம் மதிப்புள்ள தடை செய்யப்பட்ட புகையிலை மற்றும் குட்கா மூட்டைகளை சில நாட்களுக்கு முன், போலீசார் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக நாகராஜ் (55), பாண்டி (65), அமர்சிங் (33) ஆகிய மூவரை கைது செய்தனர். இந்த வழக்கை தேனி பழனிசெட்டிபட்டி சப் இன்ஸ்பெக்டர் இத்ரிஸ்கான் தலைமையில் போலீசார் விசாரிக்க மாவட்ட எஸ்பி சிவபிரசாத் உத்தரவிட்டார்.

இந்நிலையில், இந்த வழக்கில் தொடர்புடைய ஒருவரை விடுவிக்க உதவிய குற்றச்சாட்டில் பழனிசெட்டிபட்டி எஸ்.எஸ்.ஐ ஜெகன் தேனி ஆயுதப்படை போலீசுக்கு மாற்றம் செய்யப்பட்டார். மேலும், எஸ்.ஐ. இத்ரிஸ்கான் வழக்கை முறையாக விசாரிக்காமல் குற்றவாளிகளுடன் தொடர்பில் இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது. இது குறித்து, எஸ்.பி சிவபிரசாத் விசாரணை நடத்தியதில், எஸ்.ஐ இத்ரிஸ்கான் குற்றவாளிகளுக்கு உடந்தையாக இருப்பது தெரிய வந்துள்ளது. இதையடுத்து அவரை தற்காலிக பணிநீக்கம் செய்து எஸ்பி உத்தரவிட்டார்.

The post குட்கா வழக்கை முறையாக விசாரிக்காத எஸ்.ஐ சஸ்பெண்ட் appeared first on Dinakaran.

Tags : SI ,Gutka ,Theni ,SP ,Theni Subpan Street… ,Dinakaran ,
× RELATED ஆவடி காவல்படை மைதானத்தில்...