×
Saravana Stores

திருப்பூர் வீரபாண்டியில் டீ இல்லை என கூறிய பேக்கரி ஊழியர்களை சரமாரியாக தாக்கிய போதை ஆசாமிகள்

திருப்பூர்: திருப்பூர் வீரபாண்டியில் பொன்ராஜ் என்பவருக்கு சொந்தமான பேக்கரி செயல்பட்டு வருகிறது. நேற்று இரவு 12 மணியளவில் கடையை அடைக்கும் பணியில் 3 ஊழியர்கள் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது அப்பகுதியை சேர்ந்த 5 இளைஞர்கள் மதுபோதையில் வந்து பேக்கரியில் டீ கொடுக்குமாறு கேட்டுள்ளனர்.

டீ மொத்தமும் விற்று தீர்ந்துவிட்டதால் இல்லை என கடையின் ஊழியர்கள் கூறியுள்ளனர். போதையில் வந்த இளைஞர்கள் கடையில் உள்ள பண்டங்களை சாப்பிட்டதாக கூறப்படுகிறது. பின்னர் சாப்பிட்ட பொருட்களுக்கு பணம் தருமாறு ஊழியர்கள் கேட்டுள்ளனர். அப்போது டீ இல்லை என கூறிவிட்டு எதற்காக பணம் கேட்கிறாய் என போதை இளைஞர்கள் கடை ஊழியர்களிடம் தகராறில் ஈடுபட்டுள்ளனர்.

இரு தரப்பினருக்கும் வாக்குவாதம் முற்றிய நிலையில் போதையில் வந்த இளைஞர்கள் கடையில் இருந்த 2 ஊழியர்களை கடுமையக தாக்கியுள்ளனர். இதையடுத்து கடையில் இருந்த மற்றொரு ஊழியர் தங்களை காப்பாற்ற அருகில் உள்ளவர்களை உதவிக்கு அழைக்க சென்றபோது அப்பகுதியில் ரோந்து பணியில் இருந்த போலீசாரை உடனடியாக பேக்கரிக்கு அழைத்து வந்தார்.

போதை ஆசாமிகள் தாக்கியதில் பலத்த காயமடைந்த ஊழியர்களை போலீசார் மீட்டனர். மேலும் தாக்குதலில் ஈடுபட்ட போதை ஆசாமிகளை வீரபாண்டி காவல்நிலையத்திற்கு விசாரணைக்க்க அழைத்து சென்றனர்.

The post திருப்பூர் வீரபாண்டியில் டீ இல்லை என கூறிய பேக்கரி ஊழியர்களை சரமாரியாக தாக்கிய போதை ஆசாமிகள் appeared first on Dinakaran.

Tags : Tiruppur Weerabandi ,Tiruppur ,Ponraj ,Veerapandi ,
× RELATED அதிமுக பொதுக் கூட்டத்தில் கூட்டம்...