×
Saravana Stores

ஆன்லைன் மோசடி.. 5,000 சிம்கார்டுகளை முடக்க நடவடிக்கை: தமிழ்நாடு சைபர் கிரைம்!!

சென்னை: ஆன்லைன் மோசடியை அரங்கேற்ற வெளிநாடுகளில் இருந்து பயன்படுத்தப்படும் 5,000 சிம்கார்டுகளை முடக்க தொலைத்தொடர்புத் துறையுடன் இணைந்து தமிழ்நாடு சைபர் கிரைம் போலீசார் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். டிஜிட்டல் தகவல்தொடர்புகளின் எழுச்சியுடன், மோசடி அழைப்புகள் மற்றும் செய்திகள் சமீபகாலமாக அதிகரித்து வருகின்றன. அதிலும் இந்தியாவில் ஆன்லைன் மோசடிகள் அதிகரித்து வருகின்றன.

இந்நிலையில், ஆன்லைன் மோசடியை அரங்கேற்ற லாவோஸ், கம்போடியா, தாய்லாந்து உள்ளிட்ட தென்கிழக்கு ஆசிய நாடுகளில் இருந்து சைபர் குற்றங்கள் பெருமளவு அரங்கேற்றப்படுவதாக புகார் எழுந்துள்ளது. இதையடுத்து தென்கிழக்கு ஆசிய நாடுகளில் இருந்து தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களை குறிவைத்து ஆன்லைன் மோசடியில் ஈடுபடுவதாக புகார் எழுந்தன. இவ்வாறு மோசடியில் ஈடுபடுவதை தடுக்க சிம்கார்டுகளை முடக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. ஆன்லைன் மோசடி தொடர்பான புகார்கள் அதிகரித்து வருவதை அடுத்து சைபர் கிரைம் போலீசார் இந்த நடவடிக்கை எடுத்துள்ளனர்.

The post ஆன்லைன் மோசடி.. 5,000 சிம்கார்டுகளை முடக்க நடவடிக்கை: தமிழ்நாடு சைபர் கிரைம்!! appeared first on Dinakaran.

Tags : Tamilnadu ,CHENNAI ,Tamil Nadu Cybercrime Police ,Telecom Department ,Tamil Nadu ,
× RELATED எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புக்கான...